• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Corona Variant Lambda  | டெல்டாவை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா- மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Corona Variant Lambda  | டெல்டாவை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா- மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

பெரூவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரொனா வேரியண்ட் ஆன லாம்ப்டா இதுவரை 30 நாடுகளில் பரவியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இன்றைய தேதியில் டெல்டா வேரியண்ட் தான் உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா டெல்டா வகையே என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பெரூ நாட்டில் முதன் முதலாகக் கண்டுப்பிடிக்கப்பட்ட லாம்ப்டா வேரியண்ட் 30 நாடுகளில் பரவியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த வவை இன்னமும் இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று பிரிட்டன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    யுகே சுகாதார அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில், பெரூவில் தோன்றியதாகக் கருதப்படும் லாம்ப்டா வகை 30 நாடுகளில் பரவியிருப்ப்தா தெரிவித்துள்ளது.

    Also Read: வரலாற்றில் இன்று: 7 புதிய உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட நாள்!

    இந்தியாவில் பரவிய டெல்டா வகை கொரோனாதான் இதுவரை வந்ததிலேயே கொடிய வேரியண்ட் என்று கருதப்படுகிறது, ஆனால் இதை விடவும் கொடியது லாம்ப்டா வகை கோவிட் வைரஸ் என்கிறது பிரிட்டன், அங்கு 6 பேருக்கு இதுவரை லாம்ப்டா இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆய்வாளர்கள் டெல்டாவை விடவும் இது அதிகம் கொடியது, அதிகம் பரவக்கூடியது என்று கூறி வருகின்றனர்.

    மே மற்றும் ஜூன் மாதங்களில் பெரூ நாட்டில் உருவெடுத்த லாம்ப்டா 82% கொரோனா தொற்றாளர்களை பாதித்திருப்பதாக அனைத்து அமெரிக்க மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்தின் பொதுச்சுகாதார துறையும் சமீபத்தில், “லாம்ப்டா பரவும் தன்மை அதிகம் கொண்டது அல்லது கொரோனா தடுப்பூசியையும் வீரியமிழக்கச் செய்து உடலைத் தாக்கும் தன்மை கொண்டது” என்று கூறியுள்ள்னர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: