ஹோம் /நியூஸ் /உலகம் /

லாலு யாதவிற்கு வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - தேஜஸ்வி யாதவ் தகவல்!

லாலு யாதவிற்கு வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - தேஜஸ்வி யாதவ் தகவல்!

லாலு யாதவ்விற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

லாலு யாதவ்விற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகள் ரோகிணி சிறுநீரகம் தானம் செய்த நிலையில், அவரும் நலமுடன் உள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaSingaporeSingapore

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 74 வயதான லாலு பிரசாத் யாதவ் பல உடல் நலக்கோளாறுகள் காரணமாக நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவசை சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.

அதன் அடிப்படையில் லாலுவின் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகளை எடுத்து சோதித்த பின்னர் அவரது மகள் ரோஹிணியுடையது லல்லுவிற்கு ஒத்துப்போனது. தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா, நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தார்.

அதன்படி, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று லாலு யாதவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆப்பரேஷன் தியேடரில் இருந்து ஐசியு படுக்கைக்கு லாலு அழைத்து செல்லப்பட்டதாக அவரது மகனும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சிறுநீரக தானம் செய்த லாலுவின் மகள் ரோகினி நலமுடன் உள்ளதாகவும் தேஜஸ்வி கூறியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னதாக ரோகினி மருத்துவமனை உடையில் உற்சமாக தனது தந்தையுடன் போஸ் கொடுத்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டார். கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் உடல் நல குறைவை காரணம் காட்டி பரோலில் வெளிவந்துள்ளார்.

First published:

Tags: Donate kidney, Kidney, Lalu prasad yadav