• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..

பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..

மாதிரி படம்

மாதிரி படம்

பெண் காவல் ஆய்வாளர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக பணிநீக்கம் செய்த காவல்துறை, அவரை பணியில் இருந்து நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைத்திருக்கிறது.

  • Share this:
போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த பெண் ஒருவரை, பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மிரட்டி, அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வான நடனம் ஆட வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொதுவாக கூறப்படுவதுண்டு, ஆனால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர் பெண் காவல் ஆய்வாளர் ஒருவராலே மிரட்டி ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நடனம் ஆட வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் இரட்டை அதிர்ச்சியை தருவதாக உள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவெட்டா நகரில் தான் இந்த மாபாதக செயல் அரங்கேறியிருக்கிறது. குவெட்டா நகரின் ஜின்னா டவுன் காவல் நிலைய சரகத்தில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

Also read:  மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

ஒரு கட்டத்தில் விசாரணை என்ற பெயரில், இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் மற்றும் போலீசார் அந்த பெண்ணை மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியதுடன், பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக அவரை நடனமாடவும் வைத்திருக்கின்றனர். மேலும் இந்த மொத்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை துணை ஐஜி முகமது அசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பார் குல் தாரின் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து இந்த புகார் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டார். சிறப்பு அதிகாரியின் விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் ஷபானா இர்ஷத், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண்ணை நிர்வாணமாக்கி நடனமாட வைத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், போலீஸ் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவந்தது.

Also read:  ஒரிஜினல் ஐபோனை எவ்வாறு அடையாளம் காணலாம் - டிப்ஸ்கள் இங்கே!

இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக பணிநீக்கம் செய்த காவல்துறை, அவரை பணியில் இருந்து நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைத்திருக்கிறது. மேலும், விசாரணைக்கு அழைத்து வந்து லாக் அப்பில் பெண்ணை சித்ரவதை செய்த விவகாரத்தில் ஏற்கனவே புஷ்ரா அஃப்சல், ஹூமா பைஃசல், உஸ்மா நஸ்ரின், ஃபாரா கலீல் மற்றும் சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் விசாரணை கைதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பெண் போலீசாரே பெண் என்றும் பாராமல் அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் நிலையத்தில் மட்டுமல்ல சிறையில் கூட இப்படி ஒரு மனித உரிமை மீறல் சம்பவம் நடக்கக் கூடாது என டிஐஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: