• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆய்வகத்தில் தயாராகும் கோழி இறைச்சி.. சிங்கப்பூர் உணவகத்தில் அறிமுகம்.. (வீடியோ)

ஆய்வகத்தில் தயாராகும் கோழி இறைச்சி.. சிங்கப்பூர் உணவகத்தில் அறிமுகம்.. (வீடியோ)

கோழி இறைச்சிக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் உருவான கோழி இறைச்சி சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ளது.

  • Share this:
    விலங்குகளை கொன்று பெறப்படும் இறைச்சிக்கு பதிலாக, ஆய்வகத்தில் இறைச்சியாகவே உருவாக்கி விட்டால் என்ன? என்ற கேள்விக்கு பதிலாக விளைந்ததுதான் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கோழி இறைச்சி. 2050 ஆம் ஆண்டில் இறைச்சி நுகர்வு 70 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளை வளர்த்து அவற்றை கொன்று பெறப்படும் இறைச்சிக்கு மாற்று வேண்டுமென்ற சிந்தனையின் விளைவாக வளர்ப்பு இறைச்சி கிடைத்திருக்கிறது.



    தற்போது சந்தையில் கிடைக்கும் இறைச்சிக்கு மாற்றான பொருட்கள் தாவர அடிப்படையிலானவை என்பதால் இறைச்சிக்கு மாற்றாக, ஆனால் அதே சுவையுடன் கூடிய பொருட்களை உருவாக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

    இதில் சான்ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஈட் ஜஸ்ட் என்னும் நிறுவனம் கோழி இறைச்சியை வெற்றிகரமாக ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளது. உயிருள்ள கோழியின் ஏதேனும் ஒரு செல்லைக் கொண்டு ஆய்வகத்தில் தசைப்பகுதி வளர்க்கப்படுகிறது.



    இந்த வளர்ப்பு இறைச்சி குறித்த ஆய்வுகளை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நாசா ஆரம்பித்து விட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மாட்டிறைச்சியில் செய்த பர்கர் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இறைச்சியின் சுவை இருந்தபோதும் அதன் கொழுப்புத்தன்மை குறைவாலும், வித்தியாசமான வடிவமைப்பாலும் அப்போது வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில் தற்போது ஈட் ஜஸ்ட் நிறுவனத்தின் வளர்ப்பு இறைச்சியை உணவகத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியுள்ளது. சிங்கப்பூர் உணவு நிறுவனத்தின் நிபுணர் குழு ஈட் ஜஸ்டின் இறைச்சியை ஆய்வு செய்து அது உண்பதற்கு பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது.

    புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு

    இதையடுத்து வளர்ப்பு இறைச்சியால் செய்யப்பட்ட சிக்கன் நக்கெட்டுகளின் விற்பனை வரும் சனிக்கிழமை முதல் சிங்கப்பூரில் உள்ள 1880 என்னும் உணவகத்தில் தொடங்கப்பட இருக்கிறது. இந்திய மதிப்பின் படி 3600 ரூபாய்க்கு இந்த வளர்ப்பு இறைச்சியால் செய்யப்பட்ட சிக்கன் நக்கெட்டுகள் விற்கப்பட இருக்கின்றன.

    வளர்ப்பு இறைச்சியின் மீது மக்கள் எந்த அளவிற்கு நம்பிக்கை வைப்பார்கள் என்பதுவும், அதன் விலையும் தற்போது வளர்ப்பு இறைச்சி முன் உள்ள சவாலாக இருக்கின்றன. ஆனாலும் உணவுத்தொழிலில் இது மிக முக்கியமான மைல்கல் என்று ஈட் ஜஸ்ட் நிறுவன உரிமையாளர் கூறியுள்ளதையும் தவிர்க்க முடியாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: