Home /News /international /

நபிகள் குறித்த சர்ச்சை கருத்து.. போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்தும் குவைத் அரசு

நபிகள் குறித்த சர்ச்சை கருத்து.. போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்தும் குவைத் அரசு

குவைத் போராட்டம்

குவைத் போராட்டம்

குவைத் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை அவர்களின் விசாவை ரத்து செய்து அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் நாட்டின் விதிகளின்படி அங்கு வந்து தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டினர் போராட்டம் நடத்த அனுமதியில்லை.

மேலும் படிக்கவும் ...
    பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை டிவி விவாத நிகழ்ச்சியில் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் மட்டுமில்லாது சில சர்வதேச நாடுகளிலும் நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், குவைத் நாட்டில் நுபுர் சர்மா கருத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குவைத் நாட்டின் குடிமக்கள் அல்லாது அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் என அந்நாட்டு அரசு கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளது.

    குவைத் நாட்டின் விதிகளின்படி அங்கு வந்து தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டினர் போராட்டம் நடத்த அனுமதியில்லை. அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் விசாவை ரத்து செய்து அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். எனவே, நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினரை அந்நாட்டு காவல்துறை கைது செய்து அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப உள்ளதாகக் கூறியுள்ளது. அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

    பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தால் நபிகள் நாயகம் தொடர்பாக கூறிய கருத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாது அரபு நாடுகளில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அரபு மற்றும் வளைகுடா நாடுகளின் வெளியுறவுத்துறை இந்திய தூதர்களை அழைத்து தனது ஆட்சேபனையை தெரிவித்தது. மேலும், தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இந்திய பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என மேற்கண்ட நாடுகளில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதையும் படிங்க: உக்ரைனின் மாபெரும் உணவு கிடங்கில் ரஷ்யா தாக்குதல் - 3 லட்சம் டன் தானியம் சேதம்

    இந்நிலையில், நுபுர் சர்மா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது மகாராஷ்டிராவிலும் டெல்லியிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் பேச்சுக்கு எதிராக நாட்டின் வட மாநிலங்களில் ஏற்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியது. இதன் விளைவாக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Protest

    அடுத்த செய்தி