பாகிஸ்தான் vs இந்தியா! குல்புஷன் ஜாதவின் வழக்கு கடந்த வந்த பாதை

வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை பாகிஸ்தான் மீறி விட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

Web Desk | news18
Updated: July 17, 2019, 8:32 PM IST
பாகிஸ்தான் vs இந்தியா! குல்புஷன் ஜாதவின் வழக்கு கடந்த வந்த பாதை
குல்புஷண் ஜாதவ்
Web Desk | news18
Updated: July 17, 2019, 8:32 PM IST
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் குல்புஷன் ஜாதவ்-க்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...


  • முன்னாள் கடற்படை அதிகாரியான குல்புஷன் ஜாதவ், 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டார். பலுசிஸ்தானில் உளவு பார்த்த போது கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தானும், தொழில் நிமித்தமாக ஈரான் சென்ற போது சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இந்தியாவும் தெரிவித்தன.

  • ஜாதவ் கைது செய்யப்பட்டது இந்தியாவுக்கு முறைப்படி 22 நாட்கள் கழித்து, 25-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை தூதரக ரீதியாக கையாள வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது. இதே கோரிக்கையை இந்தியா 16 முறை பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது.

  • 2017-ம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. உளவு பார்த்ததாக சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறிய பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது.

  • மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மே எட்டாம் தேதி இந்தியா, சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை பாகிஸ்தான் மீறி விட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தானை ஜாதவ் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டை இந்தியா அடியோடு மறுத்தது.

  • 2017-ம் ஆண்டு மே 18-ம் தேதி, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது.

  • 2014-ம் ஆண்டு நடைபெற்ற பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு ஜாதவ் காரணமாக இருந்தார் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை, கற்பனையான பொய் எனக் கூறி இந்தியா நிராகரித்தது.

  • தூதரக ரீதியிலான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான், டிசம்பர் 25-ம் தேதி ஜாதவின் மனைவியையும், தாயாரையும் அவரைச் சந்திக்க அனுமதித்தது. ஆனால் இந்தச் சந்திப்பின்போது தாலி உள்ளிட்டவற்றை கழற்றச் செய்து ஜாதவின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் துன்புறுத்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

  • சர்வதேச நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இரு நாடுகளும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தன. அப்போது ஜாதவ் வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் மரியாதையாக நடத்தப்படுகிறார் என பாகிஸ்தான் தெரிவித்தது.

  • இதைத்தொடர்ந்து ஜுலை 17-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ஜூலை 4-ம் தேதி சர்வதேச நீதிமன்றம் அறிவித்தது. அதனடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Also see:

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...