ஹோம் /நியூஸ் /உலகம் /

'காலரைப் பிடித்து அடித்து தரையில் தள்ளினார் வில்லியம்'.. இங்கிலாந்து இளவரசர் ஹாரி சொன்ன ஷாக் தகவல்!

'காலரைப் பிடித்து அடித்து தரையில் தள்ளினார் வில்லியம்'.. இங்கிலாந்து இளவரசர் ஹாரி சொன்ன ஷாக் தகவல்!

வில்லியம் என்னை அடித்து துன்புறுத்தியுள்ளார்

வில்லியம் என்னை அடித்து துன்புறுத்தியுள்ளார்

அவர் என் காலரைப் பிடித்து, என் நகையோடு பிடித்து இழுத்து தரையில் தள்ளினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையான 'ஸ்பேர்' வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தி கார்டியன் ஊடகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சசெக்ஸ் பிரபுவான ஹாரி , இப்போது வேல்ஸ் இளவரசராக உள்ள தனது சகோதரர் வில்லியம் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக 6 பக்க அறிக்கையை தி கார்டியன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமின் முன்னாள் மனைவி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே பற்றிய வாக்குவாதத்தின் போது, ​​வில்லியம் , இளவரசர் ஹாரியை தாக்கியதாக தெரிகிறது.

செய்தி வெளியீடு மூலம் பெறப்பட்ட பகுதிகளின்படி, வில்லியம், மேகனை கடுமையான வைத்தார்கள் கொண்டு பேசியுள்ளார். இது பற்றி பேச தொடங்கியது விவாதமாகி கைகலப்பாக மாறியது. "எல்லாம் மிக வேகமாக நடந்தது. அவர் என் காலரைப் பிடித்து, என் நகையோடு பிடித்து இழுத்து தரையில் தள்ளினார். நான் நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்தேன். அது உடைந்து என்னை காயப்படுத்தியது.முதுகில் காயம் ஏற்பட்டது. நான் ஒரு கணம் அங்கேயே படுத்து, கொஞ்சம் தெளிந்த பின்னர் எழுந்து வந்தேன்" என்று இளவரசர் ஹாரி தனது புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புத்தக பகுதியை அடிப்படையாக வைத்தே அந்த 6 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

96 வயதில் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி இறந்ததைத் தொடர்ந்து, அவர்களின் தந்தை மன்னர் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவிற்கு தயாராகும் போது சகோதரர்களின் உரசல் உறவு பற்றிய செய்தி விவாதத்திற்கு வந்துள்ளது. இந்த சகோதரர்களின் சண்டை இன்று வந்தது அல்ல. 2020 இல் ஹாரி மற்றும் மார்க்ல் தங்கள் அரச கடமைகளை விட்டுவிட்டு கலிபோர்னியாவுக்குச் சென்றதிலிருந்து இது வெளிப்படையாக நடந்து வருகிறது.2021 ஆம் ஆண்டில் சசெக்ஸின் டியூக் ஹாரி , டச்சஸ் ஓப்ரா வின்ஃப்ரேயுடன் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டபோது ஹாரி தனது சகோதரர் மற்றும் தந்தை மன்னர் சார்லஸ் III தங்கள் பாத்திரங்களில் சிக்கியதாக கூறினார். அப்போது சண்டை பெரிதாக வெடித்தது.

நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த ஹாரி கடந்த மாதம் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடனான தங்கள் கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசினார். தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சம்பவங்களால் தான் அரச குடும்பத்தை விட்டு விலகியதாக உருக்கமாக தெரிவித்தார்.

First published:

Tags: England