ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் கத்திகுத்து: 10 பேர் காயம்!

மாதிரிப் படம்

ரயிலில் சிரித்தப்படி மகிழ்ச்சியாக இருந்த பெண்களை பார்த்ததும் அவர்களை கொல்ல வேண்டும் என்று தோன்றியதாக கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.

  ஜாப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டு போட்டி நாளையுடன் நிறைவடைகிறது. ஒலிம்பிக் போட்டித் தொடர் காரணமாக டோக்கியோ நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், நேற்று  இரவு டோக்கியோ பயணிகள் ரயிலில் பயணிந்த நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் தாக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூக்குரலிட்டுள்ளனர்.  இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.  பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடுமையான காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதையும் படிங்க: ’தலையில் பேண்டேஜ்’ கிம் ஜாங் உன்னுக்கு என்னாச்சு? பீதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான்..


  இந்த சம்பவத்தில் தொடர்புடைய 36 வயது நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரயிலில் சிரித்தப்படி மகிழ்ச்சியாக இருந்த பெண்களை பார்த்ததும் அவர்களை கொல்ல வேண்டும் என்று தோன்றியதாக கூறியுள்ளார். மேலும், மகிழ்ச்சியாக பெண்களை பார்த்தால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் கடந்த  சில ஆண்டுகளாகவே கத்தி மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மேலும் படிக்க: 3 கேலக்ஸிகளுக்கு இடையே அழகிய சண்டை… புகைப்படம் எடுத்த ’ஹப்பிள்’!


   
  Published by:Murugesh M
  First published: