'மோடி இப்படிச் செய்வார் எனத் தெரியும்..!’ - விளக்கும் இம்ரான் கான்

சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிளவையும் தாண்டி, பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மோடி இப்படிச் செய்வார் எனத் தெரியும்..!’ - விளக்கும் இம்ரான் கான்
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: March 27, 2019, 8:25 PM IST
  • Share this:
இந்தியாவில் தேர்தல் நேரம் நெருங்குவதால் நிச்சயமாக புல்வாமா தாக்குதல் தேர்தல் நேர பரபரப்புக்கு உபயோகப்படுத்தப்படும் எனத் தெரியும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Financial Times உடனான நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய இம்ரான் கான், “தேர்தல் நேரம் நெருங்குவதால் ஏதாவது ஒரு சம்பவம் நிச்சயம் நடக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

அந்நேரத்தில் புல்வாமா தாக்குதல் சம்பவம் நடக்க, இதைக் கண்டிப்பாக மோடி அரசு உபயோகப்படுத்தி போர் பதற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. சூழ்நிலை வேறு விதமாக இருந்திருந்தால் பதிலடி கொடுக்கும் சூழல் உருவாகியிருக்கும். அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிளவையும் தாண்டி, பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு
First published: March 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading