Home /News /international /

மேட்ச் பிக்ஸ் செய்து ஆட்சியை கவிழ்த்த அந்நிய சக்திகள் - இம்ரான் கான் பரபரப்பு பேச்சு

மேட்ச் பிக்ஸ் செய்து ஆட்சியை கவிழ்த்த அந்நிய சக்திகள் - இம்ரான் கான் பரபரப்பு பேச்சு

இம்ரான் கான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள அனுமதித்தது.

இம்ரான் கான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள அனுமதித்தது.

இம்ரான் கான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள அனுமதித்தது.

    தனது ஆட்சியை அந்நிய சக்திகள் மேட் பிக்ஸ் செய்து கவிழ்த்து ஊழல் நபர்களை பதவியில் அமர்த்தியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெரிக்-இ -இன்சாப்(PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் அந்நாட்டின் கராச்சி நகரில் மாபெரும் பேரணி ஒன்றை நேற்று நடத்தினர். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கினர். இதன் காரணமாக இம்ரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன.

    தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றம் வாக்கெடுப்பு செய்வதற்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைப்பதாக இம்ரான் கான் அதிரடி உத்தரவிட்டார். இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்ரான் கான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள அனுமதித்தது.

    இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு கவிழந்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிப்-ஐ எதிர்க்கட்சிகள் தேர்வு செய்தன. தனது ஆட்சியை அந்நிய சக்திகள் சதி திட்டம் தீட்டி கவிழ்ததாக இம்ரான் கான் தொடர்ந்து புகார் தெரிவித்துவருகிறார்.

    இதையும் படிங்க: அசாமில் கடும் மழை வெள்ளம் - 20,000 பேர் பாதிப்பு, 8 பேர் உயிரிழப்பு

    மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி நீதி கேட்டு சென்று ஆட்சியை திரும்ப மீட்பேன் என சூளுரைத்துள்ள இம்ரான் கான், அந்நாட்டின் கராச்சி நகரில் நடைபெற்ற மாபெரும் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்றார்.

    அதில் பேசிய இம்ரான் கான், " தன் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ள கராச்சி மக்களுக்கு நன்றி. நமது நாட்டிற்கு எதிராக சதி வேலை நடக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அந்நிய சதியும் தலையீடும் உள்ளது. அதற்கு எனது அரசு பலியாகியுள்ளது.

    நான் எந்த நாட்டிற்கு எதிராக செயல்பட்டதில்லை. இந்தியாவோ, ஐரோப்பாவோ, அமெரிக்காவோ எந்த நாட்டையும் எதிரி நாடாக நான் கருதியதில்லை. நான் உலகின் மனித நேயத்தின் பக்கம் நிற்கிறேன். நான் அனைவருடன் நட்புடன் இருக்க விரும்புகிறேன். ஆனால் அடிமையாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

    நாட்டிற்காக பல நல்லத் திட்டங்களையும், பல பல்கலைக்கழகங்களையும் உருவாக்கியவன் நான். ஆனால், எனது அரசை கவிழ்க ஊழல்வாதிகள் மேட்ச் பிக்ஸ் செய்து செயல்பட்டனர். பல அரசியல் தலைவர்கள் விலைக்கு விற்கப்பட்டனர்.

    ஊழல் புகாரில் சிக்கி பெயிலில் உள்ள நபர் ஒருவர் நாட்டின் பிரதமராகியுள்ளார். பெயிலில் இருக்கும் அவரது மகன் பஞ்சாப் மாகாண முதலமைச்சராகியுள்ளார். இது நாட்டிற்கே வெட்கக் கேடு" என கடுமையாக சாடியுள்ளார். இம்ரான் கானின் இந்த பேரணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், கூட்டத்தில் பல லட்சம் மக்கள் திரண்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Imran khan

    அடுத்த செய்தி