தேர்தல் பரப்புரையில் முகக்கவசமின்றி பங்கேற்ற ட்ரம்ப்.. அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என சர்ச்சை பேச்சு..

பங்கேற்பாளர்கள் மீதும் முகக்கவசங்களை தூக்கி வீசினார். பங்கேற்பாளர்களில் பெரும்பகுதியினர் முகக்கவசம் இன்றியும், தனிமனித இடைவெளி இன்றியும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பரப்புரையில் முகக்கவசமின்றி பங்கேற்ற ட்ரம்ப்.. அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என சர்ச்சை பேச்சு..
ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு
  • Share this:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் முகக்கவசம் இன்றி டொனால்ட் டிரம்ப் பங்கேற்றதும், அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்த நிலையில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப், 4 நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தொற்றிலிருந்து தான் முழுவதுமாக விடுப்பட்டுவிட்டதாக கூறிய டிரம்ப், மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய டிரம்ப் வெள்ளை மாளிகையில் மேலும் 4 ஆண்டுகள் பணிபுரிவோம் என நம்பிக்கை தெரிவித்தார். முன்பை விட பலம் பெற்றவராக தான் உணர்வதாகவும், தனக்கு வயதாகவில்லை எனவும் டிரம்ப் கூறினார்.


கூட்டத்திற்குள் சென்று ஆடவர், அழகான பெண்கள் உட்பட அனைவரையும் முத்தமிடுவேன் என்றும் டிரம்ப் கூறினார்.

கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் டிரம்ப் பங்கேற்றது மட்டுமின்றி, பங்கேற்பாளர்கள் மீதும் முகக்கவசங்களை தூக்கி வீசினார். பங்கேற்பாளர்களில் பெரும்பகுதியினர் முகக்கவசம் இன்றியும், தனிமனித இடைவெளி இன்றியும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading