வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்த நாள் வடகொரியாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால், அதில் அவரின் பேரனாகவும் அதிபராகவும் இருக்கும் கிம் ஜாங் உன் அதில் பங்கேற்கவில்லை.
சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் கொரிய அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம்; ஆனால் நேற்று நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. 2011ம் ஆண்டில் அவர் பதவிக்கு வந்ததில் இருந்து முதல் முறையாக இந்த விழாவில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்கிறார் கிம் ஜாங் உன். உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப்படைத்திருக்கும் நிலையில், வட கொரியாவில் இதுவரையில் பாதிப்பு ஏதும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், கிம் ஜாங் உன் பங்கேற்காத காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.