பூக்கள் சரியான நேரத்தில் பூக்காததால் ஆத்தரமிடைந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங்- உன் தோட்டக்காரர்களை வதை முகாமிற்கு அனுப்பி தண்டனை வழங்கியுள்ளார்.
கிழக்கு ஆசியாவில் உள்ள கொரிய தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுதான் வட கொரியா. இந்நாட்டின் அதிபராக உள்ள கிம் ஜாங்- உன் பல்வேறு அதிரடிகளுக்கு பெயர்பெற்றவர். வல்லரசு நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு உலக நாடுகளை கதி கலங்க வைப்பவர்.
உலக நாடுகளை மட்டுமல்லாது தனது சொந்த நாட்டு மக்களையும் அதிரடி உத்தரவுகளால் கிம் ஜாங்-உன் அவ்வப்போது மிரள வைப்பதுண்டு.பஞ்சம் காரணமாக அளவாக உண்ணுங்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். நாட்டின் நன்மைக்காக என்று மக்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர், வட கொரிய முன்னாள் அதிபரும், கிம் ஜாங் உன்-னின் தந்தையுமான ஜிம்-ஜொங் -இல் அவர்களின் 10-ம் நினைவு தினத்தையொட்டி, நாட்டில் 11 நாட்களுக்கு வடகொரிய நாட்டு மக்கள் மது அருந்தவோ, சிரிக்கவோ, பொழுதுபோக்கு கொண்டாட்டங்களில் ஈடுபடவோ கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இதையும் படிங்க: உக்ரைன் அரசு இணையதளங்களில் சைபர் அட்டாக் : பின்னணியில் ரஷ்யா?
அந்தவகையில், கிங் ஜாங் உன் தந்தையின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிம் ஜாங் உன் தந்தையின் பிறந்த நாளின்போது அவரது பெயரில் உருவாக்கப்பட்ட மலரான கிம்ஜாங்கிலியா (kimjongilia) என்கிற பெகோனியா தாவர வகையைச் சேர்ந்த மலர்கள் கொண்டு நிகழ்விடம் அலங்கரிக்கப்பட வேண்டும். நடப்பாண்டில் இந்த பூ போதிய அளவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படிங்க: 26 ஆண்டுகளாக வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்த பாதிரியார்... செல்லாது என்பதால் ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி
இதனால் ஆத்திரமடைந்த கிம் ஜாங்- உன் தோட்டக்காரர்களை வதை முகாமில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். Kimilsungias , kimjongilias ஆகிய தோட்ட மேலாளர்கள் இருவரும் 6 மாதம் வதை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.