தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு நன்றி தெரிவித்து வடகொரிய அதிபர் கிம் ஜோன் உங் கடிதம் அனுப்பியுள்ளார். தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் திடீர் திருப்பதாக வடகொரிய அதிபரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.
இந்தாண்டில் மட்டும் 10க்கும் அதிகமான முறை ஏவுகணைகளை வடகொரிய ராணுவம் சோதனை செய்துள்ளது. எந்த நேரத்திலும் வடகொரிய அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடும் என்று சர்வதேச பாதுகாப்ப வல்லுனுர்கள் கணித்துள்ளார்கள்.
இந்நிலையில் தென்கொரிய அதிபர் பதவியில் இருந்து விரைவில் விலகப்போகும் மூன் ஜே இன்னுக்கு கிம் ஜோங் உன் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த தகவலை தென்கொரிய அதிபர் அலுவலகமான ப்ளூ ஹவுஸ் உறுதி செய்துள்ளது. இதற்கு பதில் அளித்து தென் கொரிய அதிபரும் வடகொரிய அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் என்ன வாசகங்கள் இடம் பெற்றுள்ளன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - ‘ஆடையில் வெள்ளை ரிப்பன் இல்லாவிட்டால் துப்பாக்கிச் சூடு’ – உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ரஷ்ய ராணுவம்
இருப்பினும், அமைதி முயற்சியை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்து கிம் ஜோங் உன் கடிதம் எழுதியுள்ளார் என்ற தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தென் கொரிய அதிபர் மூன், கிம் ஜோங் உன்னை 3 முறை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் அணு ஆயுத ஒப்பந்தங்கள் தொடர்பாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 2019ல் பேச்சுவார்த்தை நடத்தினார். துரதிருஷ்டவசமாக இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க - இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு இம்ரான் கான் பாராட்டு!!
இதற்கிடையே வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ., ‘கிம் ஜோங் உன்னும், மூனும் வடகொரியா – தென்கொரியா இடையே முயற்சி மேற்கொண்டு வருவதாக’ செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய ராணுவத்தின் நிறுவன தினத்தையொட்டி வரும் 25-ம்தேதி பேரணி நடத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தென்கொரியாவின் அடுத்த அதிபராக யூன் சுக் யோல் தேர்வாகியுள்ளார். இவர், வடகொரியா அச்சுறுத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.