வடகொரியாவில் சிறுவர்கள் ஹாலிவுட் படங்கள் மற்றும் தென் கொரியாவின் படங்களைப் பார்த்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சிறுவர்களின் பெற்றோர்கள் 6 மாதக்கால தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
வடகொரியாவைப் பொருத்தவரை அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் ஆட்சியாக இல்லாமல் அவரின் குடும்ப ஆட்சியாகத்தான் நடைபெறுகிறது. தென் கொரியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்களைக் கடுமையாக தவிர்க்கும் வடகொரிய அதிபர், நாட்டு மக்களும் அதனையே பின்பற்ற வேண்டும் என்று சட்டங்களைக் கொண்டுவருகிறார்.
வடகொரியா தனக்கு என்று தனி கொள்கையில் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக இதர நாட்டு கலாச்சாரங்கள் நாட்டிற்குள் வராமல் பார்த்துக்கொண்டு வருகின்றனர். அப்படி தற்போது ஹாலிவுட் படங்களைச் சிறுவர்கள் பார்க்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். மீறினால் சிறுவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே போல், படங்களைப் பார்க்கும் சிறுவர்களின் பெற்றோர்கள் 6 மாதம் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் பெற்றோர்களுக்குக் கூட்டங்கள் நடத்தப்பட்டு சிறுவர்களை கலாச்சார வழியில் வளர்ப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது என்று சில செய்தி நிறுவனங்களால் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தென் கொரியாவின் படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், பாடல்களை கேட்பதற்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hollywood, Movies, North korea