எதாவது பிரச்சினை என்றால் நாம் உடனே காவல்துறைக்கோ அல்லது அவசர கட்டுப்பாட்டு உதவி மையத்துக்கோ அழைப்போம். மேலும் விபத்து மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் அழைக்கிறோம். உடனே சம்பந்தப்பட்ட காவல் துறையினர், தீயனைப்பாளர்கள், பேரிடர் மீட்பு படையினர் அல்லது பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில் நியூசிலாந்தில் நடைபெற்ற ஒரு வினோத சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்கு குழந்தை ஒன்று தன்னுடைய அப்பாவின் மொபைல் போனை எடுத்து அவசர உதவி மையத்துக்கு அழைப்பு விடுத்தது. நான்கு வயதுள்ள குழந்தை, அங்குள்ள அவசர உதவி மையத்திற்கு கால் செய்து பேசுவது இதுவே முதல்முறை என்பதால், அங்கிருந்த அதிகாரி ஆச்சரியத்துடன் என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த குழந்தையோ ‘நான் உங்களுக்கு என்னுடைய பொம்மைகளை காட்ட விரும்புகிறேன். பொம்மைகளை பார்க்க எங்கள் வீட்டுக்கு வாருங்கள்’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளது.
இதனை தெரிந்துகொண்ட குழந்தையின் தந்தை உடனடியாக மீண்டும் அதே எண்ணிற்கு கால் செய்து குழந்தை செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அவசர உதவி மையத்தை சேர்ந்த அதிகாரிகள் இதனை ஜாலியாக நினைத்து கடந்துவிடவில்லை. அந்த குழந்தையை பார்க்க வீட்டுக்கு சென்றுவிட்டனர். கர்ட் என்ற போலீஸ்காரர் அங்கு சென்றுள்ளார். அவர் குழந்தையின் வீட்டுக்கு சென்று, குழந்தையிடம் தான் வந்துவிட்டதாக கூறினார். அந்த குழந்தை வீடு முழுவதும் உள்ள பொம்மைகளை காட்டியது. அதனை பார்த்த கர்ட், அக்குழந்தையிடம் விளையாடினார்.
Also read:
லக்கிம்பூர்கேரியில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்தை சந்தித்ததற்காக விவசாயிகளின் போராட்ட குழு தலைவர் சஸ்பெண்ட்!
இதனை தொடர்ந்து கர்ட்டும், அந்த குழந்தையும் பேசும் வீடியோவையும் காவல்துறையினர் பேஸ்புக்கில் வெளியிட்டனர். குழந்தையுடன் பேசும் போலீஸ்காரர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்டோபர் 15 அன்று இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இந்த வீடியோவை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள், நீங்கள் இவ்வளவு அழகான மனிதர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை. காவல்துறை எப்பொழுதும் கம்பீரமாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
Also read:
மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பரவல்!
குழந்தையுடன் யார் இருந்தாலும் அவர்களும் சிறு குழந்தையாக மாறிவிடுகிறார்கள். அனைத்து நாட்களிலும் வேலை செய்யும் காவலர்களுக்கு ஓய்வு தருவது அவசியம் ஆகும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த நல்ல வீடியோவை ஷேர் செய்ததற்கு நன்றி என்றும், குழந்தை கேட்டதற்காக காவல்துறை செய்யும் உதவி பெரியது. அந்த குழந்தை எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும், அருமையான வீடியோ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.