ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்ய வெளவால்களில் 'தடுப்பூசி-எதிர்ப்பு' தன்மை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ்!

ரஷ்ய வெளவால்களில் 'தடுப்பூசி-எதிர்ப்பு' தன்மை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ்!

புதிய கொரோனா வகை வைரஸ்

புதிய கொரோனா வகை வைரஸ்

Khosta-2 மார்ச் மற்றும் அக்டோபர் 2020 க்கு இடையில் சோச்சி தேசிய பூங்காவில் இருந்து எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கோஸ்டா-2 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு ரஷ்ய வெளவால்களில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டு வகையைக் கண்டறிந்துள்ளது. மக்களைப் பாதிக்கக்கூடிய திறன் கொண்ட "Khosta-2" வைரஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சியானது  PLoS Pathogens  எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இப்போது சந்தையில் உள்ள அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும் முற்றிலும் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இந்த வகை வைரஸ் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வெளவால்களில் இருந்து மனிதர்களுக்கு எளிதாகப் பரவக் கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோஸ்டா-2 என்றால் என்ன?

கோஸ்டா-2 என்பது , கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சர்பெகோவைரஸ்( sarbecovirus ) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இது கோவிட் நோய்க்கு காரணமான SARS-CoV-2 உடன் தொடர்புடையது என்பதைத் தவிர வேறு எதுவும் இன்னும் தெரியவில்லை.

வைரஸ் எப்போது, ​​எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

மார்ச் மற்றும் அக்டோபர் 2020 க்கு இடையில் சோச்சி தேசிய பூங்காவில் இருந்து எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கோஸ்டா-2 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, SARS-CoV-2 பற்றி உலகம் பயந்து பீதியில் இருந்த அதே நேரத்தில் இந்த கிருமியும் இருந்துள்ளது. இருப்பினும், ரஷ்ய அரசாங்கம் சமீபத்தில் 2022 மே மாதத்தில் தான் அதன் இருப்பை ஒப்புக்கொண்டது.

இப்படியும் ஒரு உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்!

இது மனிதர்களுக்கு ஆபத்தானதா?

இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்த டாக்டர் ஸ்டெஃபனி சீஃபர்ட் மற்றும் அவரது சகாக்களின் கூற்றுப்படி, கோஸ்டா -2 ஒரு ஜூனோடிக் வைரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இது "கோவிட் வைரஸைப் போலவே விலங்குகளிடம் இருந்து மனித உயிரணுக்களுக்கு எளிதில் பரவக்கூடியது." என்று ஆய்வாளர்கள்  குழு தெரிவித்துள்ளனர் .

எவ்வாறு பாதிக்கிறது?

இந்த வைரஸ் மனித உயிரணுக்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள ACE-2 நுழைவு நொதியுடன் தனது ஸ்பைக் போன்ற புரதத்தை இணைக்கிறது. பின்னர் உயிரணுக்களுள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏதேனும் தடுப்பூசிகள் உள்ளனவா?

வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சிக் குழு வைரஸைப் பற்றி மேலும் அறிய சோதனை செய்துள்ளது. இன்று நாம் சந்தையில் கிடைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். மாடர்னா மற்றும் ஃபைசரின் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கும் இந்த வைரஸ்  "எதிர்ப்பு திறன் " இருப்பதாக ஆய்வக சோதனை வெளிப்படுத்தியது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Corona death, Covid-19