ஜமால் கஷோக்கியின் கொலை என் கண்காணிப்பிலேயே நடந்தது! ஒப்புக்கொண்ட சவுதி இளவரசர்

ஜமால் கஷோக்கியின் கொலை என் கண்காணிப்பிலேயே நடந்தது! ஒப்புக்கொண்ட சவுதி இளவரசர்
ஜமால் கஷோகி
  • News18
  • Last Updated: September 26, 2019, 5:52 PM IST
  • Share this:
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு நான் பொறுப்பு என்று சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தின் செய்தியாளர் ஜமால் கஷோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி நாட்டிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை நடைபெற்று சில தினங்களுக்கு பின்னரே, கொலை நடைபெற்றது உலகக்கு தெரியவந்தது.

முகமது பின் சல்மான்இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால், உலக நாடுகள் பலவும் சவுதி அரேபியாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தன. இந்தநிலையில், பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தில் பேசிய சவுதி இளவரசர் ஜமால் கஷோக்கி, ‘ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு. என்னுடைய கண்காணிப்பில்தான் இந்தக் கொலை நடைபெற்றது’என்று தெரிவித்தார்.

கஷோக்கி மரணம் நடைபெற்று ஒரு ஆண்டு நினைவாக பி.பி.எஸ் எடுத்த ஆவணப்படத்தின் ப்ரோமோவில் முகமது பின் சல்மான் மேற்கூறிய தகவலைத் தெரிவித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி முழு ஆவணப்படமும் வெளியாகவுள்ளது. அதில், மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:
First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்