“இப்படி அல்லவா தொடங்க வேண்டும் புத்தாண்டு” லாட்டரியில் ரூ.28 கோடி வென்ற இந்தியர்...!

மொத்தத்தில் லாட்டரி வென்ற 10 பேரில் 8 பேர் இந்தியர்கள். 8 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

Web Desk | news18
Updated: January 4, 2019, 9:47 AM IST
“இப்படி அல்லவா தொடங்க வேண்டும் புத்தாண்டு” லாட்டரியில் ரூ.28 கோடி வென்ற இந்தியர்...!
லாட்டரி வென்ற சரத் புருஷோத்தமன்
Web Desk | news18
Updated: January 4, 2019, 9:47 AM IST
அபுதாபி விமான நிலையத்தில் நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த சரத் புருஷோத்தமன் என்பவர் ரூ.28 கோடியை வென்றுள்ளார்.

வளைகுடா நாடுகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வப்போது, அங்கு நடக்கும் லாட்டரி குலுக்கலில் அவர்கள் வெற்றி பெற்று பணத்தை குவிப்பதும் வாடிக்கையான ஒன்றே.

இந்நிலையில், அபுதாபி விமான நிலையத்தில் நேற்று காலை லாட்டரி குலுக்கல் நடந்துள்ளது. இதில், கேரளாவைச் சேர்ந்த சரத் புருஷோத்தமன் இந்திய மதிப்பில் ரூ.28 கோடி வென்றுள்ளார். முதலில் இதனை நம்ப மறுத்த அவர், பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னரே அதிர்ச்சியுடன் நம்பியுள்ளார்.

மொத்தத்தில் லாட்டரி வென்ற 10 பேரில் 8 பேர் இந்தியர்கள். 8 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். “கடந்த சில ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வருகிறேன்” என்று 28 கோடி ரூபாய் வென்றாலும் எந்த ரியாக்‌ஷன் இல்லாமல் சரத் கூறியுள்ளார்.

Also See..

First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...