நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை காண கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காரிலேயே கத்தாருக்கு பயணம் செய்து அசத்தியுள்ளார். வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.
இந்நிலையில், உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர்.இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடாத போதிலும், இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல் போன்ற அணிகளுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
குறிப்பாக மெஸ்ஸிக்காக அர்ஜென்டினாவையும், ரொனால்டோவுக்காக போர்ச்சுகல் அணியையும் இந்திய ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் ஆதரவு தந்து வருகின்றனர். குறிப்பாக, கேரளா, கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகளுக்கு மோகம் அதிகம். அப்படித்தான் கேராளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், மெஸ்ஸியின் ஆட்டத்தை காணுவதற்காக கார் பயணமாகவே கேரளாவில் இருந்தே கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். கேரளாவின் 33 வயது பெண் நாஜி நௌஷி. 5 குழந்தைகளுக்கு தாயான இவர் தனது மகேந்திரா தார் காரில் தனது கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்றார்.
பின்னர், அங்கிருந்து ஓமன் வரை கப்பலில் காரை எடுத்துச் சென்று அங்கிருந்து காரில் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். சுமார் 2,973 கிமீ தூரத்தை காரிலேயே கடந்து சென்றுள்ளார். தன் பயணத்தில் உண்பதற்காக பாத்திர பண்டங்களைக் கூடவே எடுத்துச்சென்றுள்ளார் நௌஷி.
View this post on Instagram
தான் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகை எனக்கூறும் நௌஷி, அவர் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையோடு தான் கத்தாருக்கு பயணம் செய்ததாக தெரித்தார். வழியில் புட் பாய்சன் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கில் தான் உணவு பொருள்கள் பாத்திரங்களுடன் சமைத்து சாப்பிட்டு பயணம் செய்வதாகக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA 2022, FIFA World Cup, FIFA World Cup 2022, Qatar