துபாயில் கொள்ளையனை சமார்த்தியமாக பிடித்த கேரள இளைஞர் - வைரல் வீடியோ

கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது நடந்த இநத சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது நடந்த இநத சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
துபாயில் வசித்து வரும் கேரள மனிதர் ஒருவர், ரூ.80 லட்சம் ரொக்க பணத்துடன் ஓடிவந்த திருடனை தனது காலால் தட்டிவிட்டதால் ஒரு கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 40 வயதான ஜாஃபர் பராபுராத் என்பவர், டீராவின் பானி யாஸில் உள்ள தனது மாமாவின் உணவு விடுதியில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதில் ஒரு இளைஞர் கையில் கொஞ்சம் பணத்துடன் தப்பி ஓடி வருவதை ஜாஃபர் முன்னதாகவே கவனித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ஜாஃபர் தனது மாமா கடைக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது தூரத்தில் பணத்துடன் தப்பி ஓடி வரும் ஒரு திருடனை சில நபர்கள் துரத்தி வருவதை அவர் கவனித்தார். அப்போது  அந்த திருடன் ஜாஃபரை கடந்து செல்ல முயன்றர். ஆனால் ஜாஃபர் சற்றும் யோசிக்காமல் தனது காலை நீட்டி திருடனின் கால்களை தட்டி விட்டுள்ளார். வேகமாக ஓடிவந்த திருடன் ஜாஃபர் கால் தடுப்பால் தனது கால் இடறி கீழே விழுந்துள்ளான்.

இதன் காரணமாக திருடனை துரத்தி வந்த நபர்கள் பணத்துடன் அவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி பனியா ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரும் யோசிக்காத வகையில் வேகமாக ஓடி வரும் திருடனை தட்டி விட வேண்டும் என்ற   ஜாஃபரின் யோசனையை நெட்டிசன்கள் பராட்டி வருகின்றனர். மேலும் அவர் ஒரு கால்பந்து வீரர் போல சாதுர்யமாக பந்தை தடுப்பது போல திருடனை தடுத்துள்ளதாக பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து கலீஜ் டைம்ஸிடம் பேசியபோது ஜாஃபர் கூறியதாவது, “திருடன் சில நபர்களால் துரத்தப்பட்டான். அப்போது நான் அவனை பிடிக்க விரும்பினேன். ஆனால் அந்த திருடன் மிக வேகமாக ஓடுவதை உணர்ந்தேன். எனவே, நான் என் காலை நீட்டி அவன் வேகத்தை தடுத்தேன். எனது சகோதரர் நஜீப்பும் திருடன் ஓடி வந்த பாதையில் ஒரு நாற்காலியை வீசினார். இந்த இரண்டு காரணிகளின் கலவையால் திருடன் கீழே விழுந்தான், ”என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... கற்பூரம், ஓமம் ஆகியவற்றை நுகர்வதால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா?

சரியான நேரத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து, திருடனை துரத்தி வந்த கும்பல் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருடப்பட்ட தொகையும், உரிமையாளரிடம் திருப்பித் தரப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஜாஃபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருவதாகவும், ஆனால் கொரோனா தொற்றுநோயால் வேலை இழந்ததாகவும் கூறியுள்ளார். இப்போது அவர் ஒரு டிரைவராக முயற்சிக்க மீண்டும் துபாய்க்கு வந்துள்ளதாக கூறினார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: