• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்

சாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்

கென்யா விபத்து

கென்யா விபத்து

கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீ பரவியதால் அங்கு கூடியிருந்த மக்களால் வேகமாக வெளியேற முடியவில்லை.

  • Share this:
    விபத்துக்குள்ளான பெட்ரோல் டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பிடிக்க சென்றபோது 13 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் கென்யாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. கிஸூமு பகுதியில் பால் வண்டியும், பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரி சாலையில் இருந்து விலகி அருகில் கவிழ்ந்தது. டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் வெளியேறுவதை கண்ட அப்பகுதி மக்கள் விபரீதத்தை உணராமல் கைகளில் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

    Also Read: பூட்டிய வீட்டை டார்க்கெட் செய்து கொள்ளையடிக்கும் தம்பதி கைது..! - போலீசிடம் சிக்கியது எப்படி?

    அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீ பரவியதால் அங்கு கூடியிருந்த மக்களால் வேகமாக வெளியேற முடியவில்லை. இந்த விபத்தில் 13 பேர் நிகழ்விடத்திலே தீயில் கருகி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என 24பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கென்யா விபத்து


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விபத்துக்குள்ளான டேங்கர் லாரிக்கு அருகே ஏராளமான இருசக்கர வாகனங்கள் சிதறிக்கிடக்கின்றன. தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எலும்புகள் அப்பகுதியில் சிதறிக்கிடக்கின்றன. இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தில் மேலும் சில உள்ளூர்வாசிகள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் மறைந்திருப்பதாக கூறுகின்றனர். 80 சதவிகித காயங்களுடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கென்யா அதிகாரிகள் கூறுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: