• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • குழந்தைகளை கொன்று இரத்தம் குடித்த சீரியல் கில்லர் - சிறையில் இருந்து தப்பிய கொடூரன் சடலமாக கண்டெடுப்பு

குழந்தைகளை கொன்று இரத்தம் குடித்த சீரியல் கில்லர் - சிறையில் இருந்து தப்பிய கொடூரன் சடலமாக கண்டெடுப்பு

சீரியல் கில்லர்

சீரியல் கில்லர்

நைரோபியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவனது கிராமத்தில் மாஸ்டன் வஞ்சாலா சடலமாக கண்டெடுக்கப்பட்டான்

 • Share this:
  கென்யாவைச் சேர்ந்த சீரியல் கில்லர் அவனது சொந்த கிராமத்தில்  கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

  கென்யா சேர்ந்த மாஸ்டன் வஞ்சாலா (Masten Wanjala). இவருக்கு 20 வயதாகிறது. கென்யா போலீஸ் வட்டாரத்தில் இவரை  ‘ரத்தவெறிக்கொண்ட காட்டேரி’ என்ற அடைமொழியுடன் அழைக்கின்றனர். கென்யாவின் சீரியல் கில்லராக அறியப்படும் இந்த மாஸ்டன் கடந்த 5 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களை கொலை செய்து அவர்களின் ரத்தத்தை குடித்துள்ளான். சமீபத்தில் 12 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் மாயமான வழக்கில் சந்தேகத்தின் பேரில்  மாஸ்டனை போலீஸார் ஜூலை மாதம் கைது செய்தனர். மாஸ்டனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியானது. இந்த இரண்டு குழந்தைகள் மட்டுமல்ல மேலும் பல குழந்தைகளை கடத்தி கொன்றதை ஒப்புக்கொண்டான்.

  குழந்தைகள் இறப்பதற்கு முன் அவர்களின் ரத்தத்தை குடித்ததாகவும் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த செய்தி கென்யா ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. கென்யா மக்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியையும் அச்சத்தை கொடுத்தது. நைரோபி மற்றும் கிழக்கு கென்யா பகுதிகளில் இந்தக் கொலைகளை அரங்கேற்றியது தெரியவந்தது. தன்னை ஒரு கால்பந்து பயிற்சியாளர் என அறிமுகம் செய்துக்கொண்டு சிறுவர்களை கொலை செய்துள்ளான்.

  சில சமயங்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள சிறுவர்களை பிணையக்கைதிகளாக வைத்து பணம் கேட்டு அவர்களது பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளான்.  தனது 16 வயதில் முதல் கொலையை செய்துள்ளான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துசெல்வதற்காக தேடிய போது சிறையில் இருந்து தப்பித்தது தெரியவந்தது. மாஸ்டன் இதற்காக பெரிய முயற்சிகளை எடுத்ததாக தெரியவில்லை. சிறை கதவுகளில் எந்த சேதமும் இல்லை. அந்த காவல்நிலையத்தில் இருந்து வெளியேற ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. ஆபத்தான கைதி தப்புவதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் பணியில் அலட்சியமாக இருந்ததற்காகவும் மூன்று போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் நைரோபியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவனது கிராமத்தில் மாஸ்டன் வஞ்சாலா சடலமாக கண்டெடுக்கப்பட்டான். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சடலத்தை கண்டு ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். மாஸ்டன் அடையாளம் கண்டுக்கொண்ட அவனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் போலீஸூக்கு தெரிவிக்காமல் அவனை அடித்துக்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இறந்தது மாஸ்டன் தான் என்பதை அவனது தந்தை உறுதிசெய்துள்ளார்.

  மாஸ்டனின் தந்தை பேசுகையில், அவனை நாங்கள் ஏற்பதற்கு தயாராக இல்லை. அவனது மரணம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இறுதிச்சடங்குகள் செய்ய தயாராக இருக்கிறோம் என விரக்தியுடன் கூறியுள்ளார். மாஸ்டனால்  பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர் பேசுகையில், நாங்கள் அவனை நீதிமன்றத்தில் காணவே விரும்பினோம். ஏன் எங்கள் குழந்தையை கொன்றான். எதற்காக எப்படி கொன்றான் என நீதிமன்றத்தில் அவன் கூறுவதை கேட்க காத்திருந்தோம். அவனால் இந்த கொலைகளை தனியாக செய்திருக்க முடியாது. எங்கள் குழந்தையை கடத்திய போது பணம் கேடு தொடர்ந்து போன் செய்துக்கொண்டே இருந்தான்’என்றார்.

  கென்யா மக்கள் போலீஸார் மீது சரமாரியாக கேள்விகளை முன்வைக்கின்றனர். இந்த நபர் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. 3 மாதங்களுக்கு மேலான விசாரணை பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதிகிடைப்பது சந்தேகம் என கென்யா மக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: