ஹோம் /நியூஸ் /உலகம் /

20,000 கோடி வெட்டுக்கிளிகள்: 70 ஆண்டு காலம் இல்லாத படையெடுப்பு! காப்பான் படத்தைப் போல சூறையாடப்படும் கென்யா

20,000 கோடி வெட்டுக்கிளிகள்: 70 ஆண்டு காலம் இல்லாத படையெடுப்பு! காப்பான் படத்தைப் போல சூறையாடப்படும் கென்யா

கென்யா வெட்டுக்கிளிகள்

கென்யா வெட்டுக்கிளிகள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் போல கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் விளைபயிர்களை தேடி தேடி அசுரத்தனமாக வேட்டையாடி வருகின்றன வெட்டுக்கிளிகள். 

  சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தில் வெட்டுக் கிளிகள் விவசாயத்தை எப்படி பாழ்ப்படுத்தும் என்பது கூறப்பட்டு இருக்கும். அதை நிஜத்தில் காட்டும் விதமாக கென்யாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெட்டுக் கிளிகள் படையெடுத்து உள்ளன. லோகஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த வெட்டுக் கிளிகள், விளைப்பயிர்களை அசுரத்தனமாக வேட்டையாடுகின்றன.

  ஏற்கனவே உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகள், கடந்த இரண்டு ஆண்டு காலமாக படையெடுத்து வரும் வெட்டுக் கிளிகளால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன.

  கென்யாவில் மட்டும் சுமார் 200 பில்லியன் வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது. 2019-ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் முன்பில்லாத அளவுக்கு பெய்த கனமழையே வெட்டுக்கிளியின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

  எத்தியோப்பியா, சோமாலியாவில் மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு வெட்டுக் கிளிகள் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கென்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெட்டுக் கிளிகளை மருந்து தெளித்து அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 71 கோடியே 32 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு கென்யாவில் 5 சிறிய ரக விமானங்கள் மூலம் மருந்து தெளிக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

  வருகிற மார்ச் மாதத்தில் கென்யாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கும் போது வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் ஒரு புதிய தலைவலியாக இருக்கும் என்பதால், அதற்கு முன்னதாகவே வெட்டுக்கிளிகளை முழுமையாக அழித்துவிடும் முனைப்பில் உணவு மற்றும் விவசாய அமைப்பு செயல்பட்டு வருகிறது.

  Also see:

  Published by:Karthick S
  First published: