ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட ஆறு மாகாணங்களை தாக்கிய சூறாவளி.. துயரத்தில் அமெரிக்க மக்கள்

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட ஆறு மாகாணங்களை தாக்கிய சூறாவளி.. துயரத்தில் அமெரிக்க மக்கள்

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட ஆறு மாகாணங்களை தாக்கிய சூறாவளியால், நகரங்கள் உருக்குலைந்த நிலையில், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட ஆறு மாகாணங்களை தாக்கிய சூறாவளியால், நகரங்கள் உருக்குலைந்த நிலையில், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட ஆறு மாகாணங்களை தாக்கிய சூறாவளியால், நகரங்கள் உருக்குலைந்த நிலையில், 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்காவின் அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய நகரங்களை அடுத்தடுத்து 30 சூறாவளிகள் தாக்கின. இதனால், சொல்ல முடியாத துயரத்திற்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அர்கன்சாஸ் நகரை தாக்கிய சூறாவளியில், வீடுகள், மரங்கள், பெரிய பெரிய கட்டடங்கள் என எதுவுமே தப்பவில்லை. கென்டகியில் சேதமடைந்திருக்கும் இந்த கார்களும், சின்னாபின்னமான வீடுகளும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. அங்கு மட்டும் 70க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இல்லினாய்ஸ் மாகாணத்தை தாக்கிய சூறாவளியால், அங்குள்ள அமேசான் நிறுவனத்தின் பண்டகசாலை நிலை மிக மோசமாகியுள்ளது. மேற்கூரை தரைமட்டமாகியிருக்கும் நிலையில், உள்ளே இருந்த ஏராளமான ஊழியர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.

கென்டகியின் மேஃபீல்டு நகரத்தையே சூறாவளி சுருட்டி வீசியுள்ளது. சூறாவளியின் கோர தாண்டவத்தை கழுகுபார்வையில் பார்க்கையில் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது.. வீடுகள், உடைமைகள் என அனைத்தையும் ஒரே நாளில் இழந்த மக்கள் தவித்து வருகின்றனர்.

மேஃபீல்டு மெழுகுவர்த்தி தொழிற்சாலையும் சூறாவளிக்கு இரையாகிருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஓடும் ரயிலையும் சூறாவளி வாரி சுருட்டியது. தன் வாழ்நாளில் இப்படி ஒரு சூறாவளி தாக்குதலை பார்த்ததே இல்லை என கென்டகி ஆளுநர் ஆண்டி பெஸ்ஹீர், அதிர்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

மிசோரி, டென்னசி நகரங்களும் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ன. காற்றில் வீசப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், மரங்களின் கிளைகள் சாலைகளில் சிதறி கிடக்கின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகப்பெரிய சூறாவளி என அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, நிலைமையின் தீவிரத்தை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகப்பெரிய சூறாவளி. அர்கன்சாஸ், கென்டகி, மிசோரி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை எத்தனைபேர் உயிரிழந்தார்கள், சேதம் என்ன என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை என்று கூறியுள்ள பைடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Also Read : உலகின் 100 பவர் ஃபுல் பெண்கள் பட்டியல்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்தார்

First published:

Tags: America