Home /News /international /

விண்வெளியின் விளிம்பு வரை செல்ல அரிய வாய்ப்பு.. ராட்சத பலூனில் ஒருமுறை சுற்ற எவ்வளவு செலவு தெரியுமா?

விண்வெளியின் விளிம்பு வரை செல்ல அரிய வாய்ப்பு.. ராட்சத பலூனில் ஒருமுறை சுற்ற எவ்வளவு செலவு தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

Cost of Space Travel | இந்த விண்வெளி சுற்றுலாவிற்கு எவ்வித சிறப்பு பயிற்சியும் தேவையில்லை.

சுற்றுலா என்றால் யாருக்குத் தான் பிடிக்காது, இதுவரை பேருந்து, ரயில், கப்பல் என சுற்றுலா சென்றது போய் தற்போது விண்வெளியின் விளிம்புவரை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல நிறுவனம் ஒன்று அரைக்கூவல் விடுத்துள்ளது.

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது தொடர்பாக விஞ்ஞானிகள் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், விண்வெளியை ராட்சத பலூன் வடிவ கேபின் மூலம் சுற்றிக்காட்ட உள்ளதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. விண்வெளி சுற்றுலா என்ற சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம், இந்நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமையன்று தனது ஸ்பேஸ் கேபின்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த கேபின்களில் உள்ள சொகுசு மற்றும் பாதுகாப்பான அறையில் அமர்ந்தபடி, பூமியின் மேற்பரப்பை காணலாம் என தனது வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளது. இந்த சேவை புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் 125,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.வெள்ளை நிற காப்ஸ்யூல்களுக்குள் ஐந்து-அடி (1.5 மீட்டர்) உயரமுள்ள ஜன்னல்கள், ஆழமான இருக்கைகள், இருண்ட, ஊதா நிற டோன்கள் மற்றும் அடக்கமான விளக்குகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் ப்டியூன் காப்ஸ்யூலில் உள்ள "ஸ்பேஸ் லவுஞ்ச்" முழுவதும் வைஃபை இணைப்பு மற்றும் பார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

also read : உயரமான கட்டிடத்திலிருந்து குதிக்கும் பெண்ணை இப்படி மட்டும் காப்பாத்துலன்னா அவ்ளோ தான்..

இது உண்மையில் விண்வெளி பயணமாகுமா? என்பது வியப்புக்குரிய விஷயமாக உள்ளது. இந்த பலூன்கள் விண்வெளியில் 20 மைல் தொலைவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லையான விர்ஜின் கேலக்டிகில் இருந்து 50 மைல்கள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 62 மைல் உயரத்தில் உள்ள கர்மன் கோடு ஆகியவற்றை விட குறைவான உயரமாகும்.

இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெய்ன் பாய்ன்டர் கூறுகையில் "நாங்கள் பூமியின் வளிமண்டலத்தில் 99 சதவீதத்திற்கு மேல் இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார், அதாவது பயணிகள் உண்மையிலேயே விண்வெளியின் மையத்தை பார்க்க முடியும் என்பதை அவர் உறுதிபடுத்தியுள்ளார்.இந்த விண்வெளி சுற்றுலாவிற்கு எவ்வித சிறப்பு பயிற்சியும் தேவையில்லை, பலூன் ஒரு மணி நேரத்திற்கு 12 மைல்கள் வேகத்தில் மட்டுமே மேலே ஏறவுள்ளது. மேலும் நிறுவனம் ராக்கெட் எரிபொருட்களுக்கு மாற்றாக பசுமையான, பூஜ்ஜிய உமிழ்வுகளை உருவாக்கி வருகிறது. பலூனுக்கான ஹைட்ரஜனை புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பிரித்தெடுப்பதற்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலே ஏற இரண்டு மணி நேரம், கீழே இறங்க இரண்டு மணி நேரம், கிளையுங் செய்ய இரண்டு மணி நேரம் என மொத்தம் 6 மணி நேர பயணத்தைக் கொண்ட ஒரு விண்வெளி சவாரிக்கான டிக்கெட் விலை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 95 லட்சம் ரூபாய் ஆகும்.

also read : அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்.. ஃபைல் ஷேரிங்... WhatsApp அறிமுகம் செய்ய இருக்கும் 5 புதிய வசதிகள்..

அதே சமயம் ஸ்பேஸ்எக்ஸ் கப்பலில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்த நான்கு தொழில்முனைவோர் சலுகைக்காக ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்திற்கு தலா 55 மில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளனர்.

"விண்வெளிப் பயணத்தைப் பற்றி மக்கள் நினைக்கும் விதத்தை உண்மையில் மாற்றியமைக்கும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க நாங்கள் விரும்பினோம், அது மிகவும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டுமென விரும்பினோம்" என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்களில் பயணிப்பவர்களும், எஸ்எஸ்எல்வியில் இருப்பவர்களும், பூமியைச் சுற்றி வருவதால், வெளிப்படையான எடையின்மையை அனுபவிக்கின்றனர். ஆனால் விர்ஜினின் விண்வெளி விமானம் மற்றும் ப்ளூ ஆரிஜின் ராக்கெட் மூலம் செல்லும் பயணிகள் புவிஈர்ப்பு விசையின்றி மிதக்கும் உணர்வை பெற முடியாது. இந்த பயணத்திற்காக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் அதன் முதல் ஆண்டில் 25 விமானங்களைத் திட்டமிட்டுள்ள நிலையில், இப்போது அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Space, Trending

அடுத்த செய்தி