• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • `ஆன்லைன் Zoom மீட்டிங்கில் செல்லப்பிராணிகளுக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்றம் சொல்வது என்ன?

`ஆன்லைன் Zoom மீட்டிங்கில் செல்லப்பிராணிகளுக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்றம் சொல்வது என்ன?

இதுவரை நடைபெற்ற விசாரணையில் குறைந்தது ஒரு உறுப்பினரின் பூனையாவது கலந்து கொண்டதாக பரோஸ் கூறினார், இன்னும் ஒரு சிலரின் செல்ல நாய் மீட்டிங்கில், உறுப்பினரின் பின் புறத்தில் குரைத்தது. மேலும் சட்டமியற்றுபவர்களின் குழந்தைகளும் அவ்வப்போது மீட்டிங்கில் தலையை காட்டியுள்ளனர், என்று அவர் கூறினார்.

  • Share this:
அமெரிக்க நாட்டின் நிலவரம் பற்றியும் அரசியல் குறித்தும் விவாதிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் Zoom மீட்டிங்கில் இனி உறுப்பினர்களின் பூனைகளும் நாய்களும் தலையை காட்டக்கூடாது என்று கூறப்பட்டதாக சிலர் கூறியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, முதலிடத்தில் உள்ளது. அதனால் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது தொலைதூரத்தில் இருந்தாலும் Zoom மீட்டிங்கில் ஒன்று கூடி தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், க்ளென் நகரைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி அனிதா பரோஸ்யோஷி மற்றும் ஜாக் என்று பெயரிடப்பட்ட தனது பூனைகள், சமீபத்தில் நடந்த பல வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரக் குழு விசாரணைகளின் போது தோன்றியதாகக் கூறினார். ஆனால் இதை பலரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடந்த புதன்கிழமை கூட யோஷி என்ற குசும்புக்கார பூனை தனது சுட்டித்தனத்தால் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. செல்லப்பிராணிகள் உண்மையில் பலரையும் உற்சாகப்படுத்தும் என்றாலும் பல முக்கிய விஷயங்களை விவாதிக்கும் இடங்களில் அவை பிளான்களை சொதப்புவதும் உண்டு

 பூனையின் சுட்டித்தனத்தை அப்போது யாரும் ஆட்சேபிக்கவில்லை, ஆனால் மீட்டிங்கின் இறுதியில் குழுத் தலைவரான குடியரசுக் கட்சியின் பிரதிநிதி ஜான் ஹன்ட் ஆஃப் ரிண்ட்ஜின் (Republican Rep. John Hunt of Rindge) ஒரு செய்தியை வெளியிட்டார். ``குழுத் தலைவர், அனிதா பரோஸிடம் மீட்டிங் நடக்கும் ரூமில் செல்லப்பிராணிகள் இருக்கவேண்டாமே என்று கூறினார்". இதற்கு பரோஸ், “நான், என் பூனைகளை ஸ்கிரீனிலிருந்து விலக்கி வைக்க முயற்சி செய்கிறேன். என் பூனைகளை ரூமிற்கு வெளியே வைத்திருப்பது உண்மையில் சாத்தியமற்றது.” என்று பதிலளித்துள்ளார். இருப்பினும் ஹன்ட், செல்லப்பிராணிகளுக்கு மீட்டிங்கில் தடை விதிக்க மறுத்தார்

இருப்பினும் அவர் குழு உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில், "ஜனநாயகக் கட்சியினரிடம் நான் கேட்டுக்கொள்வது: மீட்டிங்கின் போது சட்டமியற்றும் உறுப்பினரின் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பிற்கு முன்னால் பூனைகள் அணிவகுத்துச் செல்வதை நாம் விரும்புகிறோமா? சட்டமியற்றும் உறுப்பினருக்காக மீட்டிங்கில் பூனை உட்கார்ந்திருப்பதாக யாராவது கருதி விடுவார்கள், செல்லப்பிராணியாக இருந்தாலும் பரவாயில்லை அவற்றை தூரமாக வைக்கலாம்என்று அவர் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு இந்த மெசேஜை அனுப்பியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற விசாரணையில் குறைந்தது ஒரு உறுப்பினரின் பூனையாவது கலந்து கொண்டதாக பரோஸ் கூறினார், இன்னும் ஒரு சிலரின் செல்ல நாய் மீட்டிங்கில், உறுப்பினரின் பின் புறத்தில் குரைத்தது. மேலும் சட்டமியற்றுபவர்களின் குழந்தைகளும் அவ்வப்போது மீட்டிங்கில் தலையை காட்டியுள்ளனர், என்று அவர் கூறினார்.

 "இப்போதுள்ள நிலை நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், அந்தவகையில் செல்லப்பிராணிகளும் அதன் ஒரு பகுதிதான்," என்று அவர் கூறினார். மேலும் "என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் என் விலங்குகள் எனக்கு அருகில் உட்கார்ந்திருப்பது எனக்கு அமைதியை தருகிறது, அதனால் தான் நான் அவற்றை வளர்க்கிறேன். என் செல்லப்பிராணிகள் என்னை எந்த வகையிலும் திசைதிருப்பாது. மீட்டிங்கில் என்ன நடக்கிறது என்பதில் நான் முழுமையாக கவனம் செலுத்துகிறேன்.” என்றார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சட்டமியற்றுபவர்கள் தங்கள் மீட்டிங்ஸ்களின் பெரும்பகுதியை தொலைதூரத்தில் இருந்து ஆன்லைன் மூலம் கலந்து கொள்கிறார்கள். மற்ற கமிட்டிகள் மீட்டிங்கின்போது செல்லப்பிராணிகளை தடைசெய்துள்ளதா என்பது குறித்து கருத்துக் கோருவதற்கு ஹவுஸ் ஸ்பீக்கரின் அலுவலகம் இன்னும் பதிலளிக்கவில்லை.

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஒரு சிறு குழந்தைப் போன்றது. நம் சொந்த குழந்தைகளின் உடல்நிலையை எவ்வாறு கவனமாக பார்த்துக் கொள்கிறோமோ அதேப்போல் தான் நம் வீட்டு செல்லப் பிராணிகளின் உடல்நிலையையும் கவனமாக ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்கிறோம். அவற்றிற்கு தேவையானதை அவ்வப்போது நாம் செய்தும்வருகிறோம் ஆனால் நமக்கு ஒரு முக்கிய வேலை இருக்கும்போது செல்லப்பிராணிகளை ஓரமாக தள்ளிவைப்பது தான் சிறந்தது இல்லையென்றால் உங்களின் கவனம் மட்டுமல்லாது எதிரே பேசுபவரின் மன நிலையும் மாறும் என்பதற்கு மேலே சொன்ன கதையே நமக்கு உதாரணம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: