காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், எந்தவொரு கோரிக்கையையும் பிரதமர் வைக்கவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் பேசி தீர்வுகாண வேண்டும் என்று டிரம்ப் கூறினார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, ட்விட்டரில் பதிவிட்ட டிரம்ப், காஷ்மீரில் பதற்றத்தைக் குறைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், என்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிரம்ப், காஷ்மீரில் சிக்கலான சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
மத அடிப்படையில் பல செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்துக்களும், முஸ்லிம்களும் இருப்பதாகவும் இது பல ஆண்டுகளாக நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்தியஸ்தம் செய்வது அல்லது வேறு ஏதாவது செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Also see... காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.