காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம்: ஐ.நாவில் மூடிய அறையில் விவாதம்!

காஷ்மீர் குறித்து, இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போலந்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரகசிய விவாதம் நடைபெறவுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம்: ஐ.நாவில் மூடிய அறையில் விவாதம்!
ஐநா பாதுகாப்பு கவுன்சில்
  • News18
  • Last Updated: August 16, 2019, 9:34 AM IST
  • Share this:
சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று மூடிய அறையில் விவாதம் நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என ஏற்கனவே மத்திய அரசு, உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் கடிதம் எழுதியிருந்தது.

இதனை சீனாவும் ஆதரித்துள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போலந்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மூடிய அறையில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலில் சீனா, அமெரிக்கா பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நிலையில், சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.


வெளிப்படையான விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிய பாகிஸ்தானுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... காஷ்மீர் இணைப்பின் கதை!அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading