இந்தியா மீது ஐநாவில் புகார் தெரிவிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

சர்வதேசத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த விஷயத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கவனம் செலுத்தவேண்டும்.

news18
Updated: August 4, 2019, 5:36 PM IST
இந்தியா மீது ஐநாவில் புகார் தெரிவிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!
இம்ரான் கான்
news18
Updated: August 4, 2019, 5:36 PM IST
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி எல்லைத் தாண்டி இந்தியா தாக்குதலில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கேரன் செக்டாரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் தொடர் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 36 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த தாக்குதலில் 5 முதல் 7 தீவிவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கொடியுடன் வந்து இறந்தவர்களின் உடலை பாகிஸ்தான் வாங்கிச் செல்லாம் என்று இந்தியா அறிவித்தது.

இந்தநிலையில், இந்தியாவின் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘எல்லைத் தாண்டி அப்பாவி குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1983-ம் ஆண்டின் சர்வதேச ஆயுதங்கள் ஒப்பந்தத்தையும், சர்வதேச மனிதாபின சட்டத்தையும் கொத்து குண்டுகளை பயன்படுத்தியுள்ளது.

சர்வதேசத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த விஷயத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கவனம் செலுத்தவேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் பேசி தீர்ப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். நீண்ட நாள்களாக காஷ்மீர் பகுதியில் நீடித்துவரும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இது.

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி, சுயநிர்ணயம் செய்துகொள்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது மட்டுமே தெற்காசியப் பகுதிகளில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஏற்படுவதற்கு ஒரே வழியாகும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...