பார்வையின் மூலமாகவே உதவி கேட்கும் கங்காருக்கள்.. வன உயிரிகளின் இயல்பில் அதிசயத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்.. (வீடியோ)

பார்வையின் மூலமாகவே உதவி கேட்கும் கங்காருக்கள்.. வன உயிரிகளின் இயல்பில் அதிசயத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்.. (வீடியோ)

கங்காரு

வன உரியினங்கள் இப்படியான சுபாவத்தை வெளிப்படுத்துவதில்லை. அதனால், இது ஆச்சரியமானது, முக்கியத்துவமும் பெறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
வளர்ப்பு நாய்களைப் போலவே மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கு கங்காருக்கள் கற்றுக்கொள்கின்றன. பார்வை மூலமாகவே சுட்டிக்காட்டி உதவியைக் கேட்பதன் மூலம், தங்களின் தேவைகளைக் கேட்பதாக ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்

இந்த ஆய்வில் 11 சிறைபிடிக்கப்பட்ட கங்காருக்கள் பயன்படுத்தப்பட்டன. அவை வளர்க்கப்பட்ட கங்காருக்கள் அல்ல.  உணவு வைக்கப்பட்ட ஒரு பெட்டியைத் திறக்க முடியாதபோது 11 கங்காருக்களில், 10 கங்காருக்கள் ஆய்வாளர்களை பார்த்து அதைச் சுட்டிக்காட்டிய தன்மையை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் 9 கங்காருக்கள், மாறி மாறி ஆய்வாளர்களையும், உணவுப் பெட்டியையும் பார்த்தது, திறக்கச் சொல்லும் விதமான அறிகுறியை வெளிப்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்."இந்த தகவல்தொடர்பு வடிவத்தை, உதவிக்கான கோரிக்கையாக நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்" என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஐரிஷ் ஆராய்ச்சியாளர் ஆலன் மெக்லிகோட் தெரிவித்துள்ளார்.

வன உரியினங்கள் இப்படியான சுபாவத்தை வெளிப்படுத்துவதில்லை. அதனால், இது ஆச்சரியமானது, முக்கியத்துவமும் பெறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்ட்ரா கிரீன், "வளர்ப்பு விலங்குகள் மட்டுமே ஒரு பிரச்சினைக்கு உதவி கேட்க முயற்சிப்பதாக நாங்கள் முன்பு நினைத்தோம். ஆனால் இது நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்"சூழல் சரியாக இருக்கும்போது, இது ஒரு கற்றுக்கொள்ளும் நடத்தையாக இருக்க வாய்ப்புள்ளது." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Gunavathy
First published: