அமெரிக்காவின் முதல் 'Second Gentleman' - கமலா ஹாரீஸ் கணவருக்கு கிடைத்த புதிய கவுரவம்!

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ், மற்றும் அவரது கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் கமலா ஹாரீஸின் கணவர் எம்ஹாஃபுக்கும் (Emhoff) டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அவரின் பயோவில், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக 'Second Gentleman' என்ற கவுரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளிப் பெண்ணான கமலாஹாரீஸ் கணவருக்கு சமூகவலைதளத்தில் Second Gentleman என்ற புதிய கவுரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மற்றும் ஹமலா ஹாரீஸ் போட்டியிட்டனர். இதில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஜோ பைடன், ஹமலா ஹாரீஸ் வெற்றிபெற்றனர். அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடனும், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக ஹமலா ஹாரீஸூம் வரும் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வெள்ளை மாளிகையில் அமர்களமாக நடைபெற்று வருகிறது.

புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் பல்வேறு நிர்வாக குழுக்களையும், அதில் இடம்பெறும் உறுப்பினர்களையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். குறிப்பாக, இந்திய வம்சாவளியினருக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜோ பைடன் தலைமையில் அமையப்போகும் அரசு, முந்தைய அரசு நிர்வாகங்களில் இருந்து முற்றிலும் மாறபட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. சமூகவலைதளங்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளதால், அதன்வழியாக ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு உடனடியாக தீர்வு காணவும் திட்டமிட்டுள்ளது. 

அதற்காக, வெள்ளை மாளிகையில் முதன்முறையாக டிஜிட்டல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் இருக்கும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளின் சமூகவலைதளக் கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் கமலா ஹாரீஸின் கணவர் எம்ஹாஃபுக்கும் (Emhoff) டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அவரின் பயோவில், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக 'Second Gentleman' என்ற கவுரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரீஸின் கணவர், சிறந்த தந்தை என்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 

Also read... சீனாவில் வீல்சேரில் அமர்ந்தவாறு 320 மீ. கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த நபர்!

அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதுவரை எந்த செய்தியும் பகிரப்படவில்லை. இருப்பினும் 4.8 லட்சம் ஃபாலோவர்ஸ் (FOLLWERS) கிடைத்துள்ளனர். கமலாஹாரீஸின் கணவருக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய கவுரவத்துக்கு, அவரின் உறவினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆண், பெண் இருபாலின வேறுபாடுகளை களைந்து, பாலின சமத்துவத்துகான நடவடிக்கையில் ஹமலா ஹாரிஸ் கணவர் எம்ஹால்ப் ஈடுபடுவார் எனவும் நெட்டிசன்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தேர்தல் முடிவை ஏற்க மறுத்து பிடிவாதம் காட்டி வந்த டிரம்ப், பல்வேறு நெருக்கடிகளுக்கு பின்னர் புதிய ஜனாதிபதி பதவியேற்புக்கான நடைமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தார். அவரின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையில் புகுந்து மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர். டிரம்பின் தேர்தல் தோல்விக்கு அவரின் மோசமான நிர்வாகம் என குற்றம்சாட்டப்பட்டது. கொரோனா காலத்தில் பொறுப்புடன் பணியாற்றமால் இருந்தது, அரபு நாடுகளுடன் மோதல் போக்கு, பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் டிரம்ப் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனை ஒரு பொருட்டாக கருதாமல் இருந்த டிரம்ப், தேர்தலில் தோல்வியை தழுவினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: