அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளராக ஜோ பைடனை ஜனநாயகக் கட்சி புதன்கிழமை அறிவித்தது. இதையடுத்து காணொலி மூலமாக நடைபெற்று வரும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்டு தேசிய மாநாட்டில் உரையாற்றிய கமலா ஹாரீஸ், டொனால்ட் டிரம்பின் அரசின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தான் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கறுப்பின பெண்களின் உரிமைகளுக்காக போராடுவோருக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் நிகழும் சோகங்களை, உயிரிழப்புகளை டிரம்ப் அரசியல் ஆயுதமாக மாற்றுவதாகவும், டிரம்பின் தோல்வியால் தான் கொரோனாவில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இனப்பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் இணைக்கக்கூடியவராக புதிய அதிபர் இருக்க வேண்டும் என்றும், நிறவெறி மற்றும் இனவெறிக்கு தடுப்பு மருந்தே கிடையாது என்றும், அதற்காக நாம்தான் இணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க...தேர்தல் பரப்புரையில் தனது "சித்தி"களை நினைவுகூர்ந்த கமலா ஹாரிஸ்
தொடர்ந்து தனது தாயார் குறித்தும் உறவினர்கள் குறித்தும் கமலா குறிப்பிட்டு பேசினார். அப்போது தனது சித்திகள் குறித்தும் கமலா ஹாரீஸ் பேசினார். அனைத்து உறவுகளையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்ட கமலா, தனது சித்திகளை சித்தீஸ் என குறிப்பிட்டு பேசினார்.
இதையடுத்து சித்தி என்ற சொல் அமெரிக்கர்களால் இணையதளங்களில் அதிகளவில் தேடப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, Kamala Harris, USA