அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேருக்கு நேர் விவாதம்

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான நேரடி விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேருக்கு நேர் விவாதம்
கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ்
  • Share this:
துணை அதிபருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கிடையேயான முதல் மற்றும் ஒரே விவாத நிகழ்ச்சி உட்டாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சூசன் பேஜ் நடுவராக இருந்து இந்த விவாதத்தை நடத்தி வருகிறார். அதிபர் டிரம்ப் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவாதத்தில் கொரோனா பரவல் குறித்த கேள்விகளே முதலில் எழுப்பப்பட்டன.

கொரோனா தொற்று குறித்த தகவல் ஜனவரி 28 ஆம் தேதியே அதிபர் மற்றும் துணை அதிபருக்கு சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் அதனை முறையாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டிய கமலா ஹாரிஸ், இந்த அரசு மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமையை இழந்து விட்டது என்று சாடினார்.

மேலும் படிக்க...டீ சரியில்லை, உணவு சரியில்லை என பல இடங்களில் வசூல் – டிப்டாப்பாக உடையுடன் மோசடியில் ஈடுபட்ட போலி உணவுப்பாதுகாப்பு அதிகாரி..


மேலும் அமெரிக்கா வரலாறு காணாத மோசமான ஆட்சியை அதிபர் டிரம்ப் வழங்கிவருவதாகவும் கமலா குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த பென்ஸ், அதிபர் டிரம்ப், முதல் நாளில் இருந்தே மக்களின் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுத்ததாகவும், சீனாவிலிருந்து பயணங்களை ரத்து செய்து பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
First published: October 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading