மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை - ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரப் கனி

அஷ்ரப் கனி

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருகின்றன.

 • Share this:
  ஆஃப்கானிஸ்தானில் அரசுப்படைகள் மற்றும் தாலிபான்களுக்கிடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தானில் 90களில் ஆயுதம் ஏந்திய போராளிகளாக வளரத் தொடங்கிய தாலிபான்கள், 1996 ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசமாக்கினர். ஆனால், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட அல்கய்தா தீவிரவாதிகளுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததால், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் கூட்டுப்படை மூலம், தாலிபான்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் இருந்து அகற்றப்பட்டது. தொடர்ந்து. 20 ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.

  இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தாலிபான்கள் உடன் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கின. இதையடுத்து, ஆஃப்கானிஸ்தான் அரசுப்படைகளுக்கும், தாலிபான் அமைப்பிற்குமான மோதல் தொடங்கியது. தாலிபான்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். பல இடங்களில் எதிர்ப்பே இன்றி முன்னேறி வந்த தாலிபான் படைகள், கந்தஹார், ஜலாலாபாத் போன்ற நகரங்களை அடுத்தடுத்து கைப்பற்றினர். கடந்த ஜூலை 9ம் தேதி வெறும் 90 பகுதிகள் மட்டுமே தாலின்பான்களின் கைவசம் இருந்த நிலையில், கடந்த ஒரே மாதத்தில் நாட்டின் 90 சதவிகித பகுதிகளை கைப்பற்றினர்.

  Also Read:  ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் என்று அறிவிப்போம் - தாலிபான்கள்

  இறுதியாக காபூலை சுற்றி வளைத்த தாலிபான்கள் ராணுவ தாக்குதல் மூலம் உள்ளே நுழைய விரும்பவில்லை என கூறி, அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அதிபர் பதவியிலிருந்து விலகிய அஷ்ரப் கனி, ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்று தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து, காபூலுக்குள் நுழைந்த தாலிபன்கள், ஆயுதங்களுடன் சென்று அதிபர் மாளிகையை முழுவதுமாக கைப்பற்றினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருகின்றன. அதேசமயம், காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தாலிபான்கள் மீதான அச்சத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் குவிந்தனர்.

  Also Read:  ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சமடைய வேண்டாம் : தாலிபான்கள் அறிவிப்பு

  காபூலில் இருந்த 129 இந்தியர்களும்,ஏர் இந்தியா விமானம் மூலம் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். அதேசமயம், குழப்பம் மற்றும் அச்சம் காரணமாக, வங்கிகளில் இருந்த தங்களது சேமிப்புகளை எடுக்க ஆப்கானிஸ்தான் மக்கள் வங்கி வளாகங்களில் குவிந்தனர்.

  இதுதொடர்பாக, அஷ்ரப் கனி சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார். இனி நாட்டின் மரியாதைக்குக்கும், பாதுகாப்புக்கும் அவர்களே பொறுப்பாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அஷ்ரப் கனி உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, போர் முடிவுக்கு வந்ததாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: