ஹோம் /நியூஸ் /உலகம் /

காபூல் வீதிகள் விசித்திரமா இருக்கு.. சீக்கிரம் தாடி வளரனும். மனைவி, மகள்களுக்கு புர்கா தேடுகிறேன் - காபூல்வாசியின் கண்ணீர்

காபூல் வீதிகள் விசித்திரமா இருக்கு.. சீக்கிரம் தாடி வளரனும். மனைவி, மகள்களுக்கு புர்கா தேடுகிறேன் - காபூல்வாசியின் கண்ணீர்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

காபூலின் வெறிச்சோடிய வீதிகளை பார்ப்பதற்கு விசித்திரமாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆஃப்கானிஸ்தான் பேரரசுகளின் கல்லறை.. வரலாற்று அறிஞர்கள் ஆப்கானை இந்த அடைமொழியுடன் தான் குறிப்பிடுகின்றனர்.

ஆப்கான் மக்களின் போர்க்குணம். முரட்டுத்தனமாக போராடக்கூடிய ஆப்கானை எந்த பேரரசும் நீண்ட காலம் ஆண்டதாக வரலாறு இல்லை. ஆப்கான் அப்படித்தான். உலகின் எந்த இடத்தில் பிரச்னை என்றாலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 20 ஆண்டுகள் ஆப்கானை கட்டுக்குள் வைத்திருந்தது. இப்போது அங்கிருந்து கிளம்பியதன் மூலம் அந்த கூற்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அமெரிக்கப்படைகள்

காபூலை வெறும் 5 மணிநேரத்தில் கைப்பற்றியது தாலிபான்கள் அமைப்பு. மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் எனக் கூறிவிட்டு மக்களை நிர்கதியாய் விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார் அதிபர் அஷ்ரப் கானி. அமெரிக்கா தனது நாட்டு படைகளை திரும்பபெற்றதும். தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணங்களாக கைப்பற்றி முன்னேறி வந்தனர். உள்நாட்டிலே மக்கள் அகதிகளாக அங்கும் இங்கும் அழைத்தனர். காபூலே சரணாகதி என்று வந்தனர். காபூல் சில மணி நேரங்களில் தாலிபான்கள் வசம் சென்றது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

அஷ்ரப் கனி

அதன்வெளிப்பாடுதான் காபூல் விமான நிலையங்களில் காத்துக்கிடங்கும் மக்கள் கூட்டம். அரசு அலுவலங்கள் காலியாக உள்ளது. காபூலை சேர்ந்த குடியிருப்புவாசிகள் பேசுகையில், “ மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். எப்போது பரபரப்பாக காட்சியளிக்கும் காபூல் வீதிகள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளது. அங்கு யாரும் இல்லை. காபூலின் அனைத்து இடங்களும் அப்படித்தான் காட்சியளிக்கின்றன.இங்கிருந்த அதிகாரிகள், மக்கள் எல்லோரும் ஒன்று வெளிநாடுகளில் தப்பிச்சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால் விமான நிலையத்தில் விமானங்களுக்காக காத்திருக்க வேண்டும்.

Also Read: தாலிபான்.. பெண்களின் பாதுகாப்பு: உலக நாடுகளுக்கு மலாலா வேண்டுகோள்

சோதனைச் சாவடிகளில் வழக்கமாக இருக்கும் காவலர்களை காணவில்லை. வாகனஓட்டிகளை சோதனை சாவடிகளில் உள்ள தடைகளை தாங்களே தூக்கிவிட்டு தங்களது வாகனங்களை எடுத்துச்செல்கின்றனர். இங்கு உட்கார்ந்துக்கொண்டு வெறிச்சோடிய இந்த வீதிகளை பார்ப்பதே விசித்திரமாக உள்ளது.’ என்றனர்.

Also Read:  ஆப்கான் பரிதாபம்: டயரில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் பலி- வெளியாகும் பயங்கர வீடியோக்கள்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய உள்ளூர்வாசி ஒருவர், “எனக்கு இங்க ஒரு கடை இருக்கு. நான் இங்க ப்ரெட் விற்றுக்கொண்டு இருந்தேன். அதன்மூலம் கொஞ்சம் பணம் சம்பாதித்துகொண்டிருந்தேன். பாதுகாப்பு அதிகாரிகள் எல்லாம் என்னுடைய நண்பர்கள்தான். அவர்கள் இப்போது இங்கு இல்லை. என்னுடைய முதல் கவலை எனக்கு இப்போ தாடி வளரனும். கொஞ்ச நாள்களிலே தாடி எப்படி வேகமா வளரும். நான் போய் என் மனைவிக்கும் என் வீட்டு பெண்களுக்கும் போதுமான புர்கா இருக்கான்னு பார்க்கனும்” என வேதனையோடு பேசியுள்ளார்.

தலிபான் தலைவர்கள்

காபூலில் ஜவுளிக்கடை வைத்திருப்பவர் பேசுகையில், “எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. தலிபான்கள் காபூலில் நுழைந்தது என்னை பயமுறுத்தியது. அதிபர் அஷ்ரப் கானி இந்த சூழ்நிலையில் எங்களை விட்டுவிட்டு ஓடியது மிகவும் மோசமானது. போரின் காரணமாக கடந்த 7 வருடங்களில் என்னுடைய மூன்று சகோதரர்களை இழந்துள்ளேன். இப்போது எனது தொழிலை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறேன். இங்கிருக்கும் ஸ்டாக்குகளை காப்பாற்ற கடையிலே இருப்பது என முடிவு செய்துவிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து எந்த வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து பொருள்களை வாங்கப்போகிறார்கள் என எனக்கு எந்த யோசனையும் இல்லை. எனக்கு தெரியும் இனிமேல் எந்த வெளிநாட்டவரும், வெளிநாட்டு மக்களும் காபூலுக்கு வரமாட்டார்கள்” என அச்சத்துடன் பேசியுள்ளார். காபூல் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். தங்களது குடும்பம் குறிப்பாக மனைவி மற்றும் பெண் குழந்தைகளை நினைத்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Afghanistan, Airport, Shopping malls, Taliban