ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்கு பின்னர் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தாலிபான்களின் ஆட்சியில் இஸ்லாமியச் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டும் என்ற அச்சத்தில் அந்நாட்டை விட்டு வெளியேறிய விரும்பிய மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
தாலிபான்கள் மீண்டும் ஆப்கானை கைப்பற்றியதால் பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெண் கல்வி மறுக்கப்படும் , கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணை இல்லாமல் பெண்கள் பொது இடத்துக்கு வர தடைவிதிக்கப்படும். மீறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். ஆப்கானிஸ்தானை அமெரிக்கப் படைகள் கட்டுக்குள் வைத்திருந்த இந்த 20 ஆண்டுகளில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசுப்பணிகள், அரசியலில் பெண்களின் பங்களிப்பு இருந்தது. மீண்டும் 20 ஆண்டுகள் பின்நோக்கி செல்ல ஆப்கான மக்கள் விரும்பவில்லை.
Also Read: ரத்தம் தோய்ந்த 20 ஆண்டுகால நீண்ட போரை முடித்துக்கொள்கிறோம் - அதிபர் ஜோ பைடன்
இந்நிலையில்தான் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல விமான நிலையம் மற்றும் நாட்டின் எல்லைப்பகுதிகளுக்கு விரைந்தனர். காபூல் விமானநிலையத்தில் குவிந்திருக்கும் மக்கள் கூட்டம், ஓடுதளத்தில் செல்லும் விமானத்தில் ஏதோ பேருந்தில் ஃபுட்போர்ட் அடிப்பது போல் மக்கள் ஓடிச்சென்று ஏறியும் அவல காட்சிகளை காணமுடிந்தது. விமான சக்கரங்களில் பயணித்த மக்கள் விமானத்தில் இருந்து விழுந்து இறக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read: கொன்று உடல்களை நாய்களுக்கு உணவாக போடும் தாலிபான்கள்: பாதிக்கப்பட்ட பெண் தகவல்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் #Kabulhasfallen #Kabulairport என்ற ஹேஷ்கேட்டுகளில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது. மக்கள் கூட்டம் காபூல் விமான நிலையத்திற்குள் முண்டியடித்துக்கொண்டு ஓடுகின்றனர். காபூலின் அவலத்தை பாருங்கள் என அந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ சில நிமிடங்களில் ஏராளமான பார்வையாளர்களை பெற்றது. உலக சுகாதார நிறுவனம் என்ன செய்கிறது. உலக வல்லரசு நாடுகளே காபூலை பாருங்கள் என சிலர் இந்த வீடியோ ரீட்வீட் செய்தனர்.
காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தது உண்மைதான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. காபூல் விமானநிலையத்திற்குள் மக்கள் கூட்டமாக ஓடுவதாக வெளியான வீடியோ உண்மையாக காபூல் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதல்ல.
AT&T Stadium doors have opened for Cowboys vs. Seahawks pic.twitter.com/UTl68lVNwr
— Jon Machota (@jonmachota)
January 5, 2019
அந்த வீடியோவானது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. கால்பந்து மைதானத்தில் கால்பந்து போட்டியை கண்டு களிக்க ரசிகர்கள் கூட்டம் ஓடிய வீடியோ அது. ஆப்கானிஸ்தான் பிரச்னையில் அந்த வீடியோ தற்போது தவறுதலாக பகிரப்பட்டு வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.