மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் லட்சக்கணக்கானோர் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உலகில் அமைதியாக நடைபெறும் போராட்டங்களின் உரிமைக்காக கனடா எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தெரிவித்தார்.
ட்ரூடோவின் கருத்து தேவையற்றது என்றும், அவரது கருத்து இருநாட்டு நல்லுறவை பாதிக்கும் எனவும் மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு மீண்டும் தமது ஆதரவை தெரிவித்துள்ள ட்ரூடோ, விவசாயிகள் தொடர்பான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Also read: தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்கும் சான்டா கிளாஸ்.. அமெரிக்காவில் கிறிஸ்துமஸை கொண்டாட புதிய ஏற்பாடு
இதற்கிடையே, இங்கிலாந்தை சேர்ந்த 36 எம்.பிக்கள் அந்நாட்டின் வெளியுறவு செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்