கனடாவில் ஆட்சியைத் தக்க வைக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ!

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கனடாவில் ஆட்சியைத் தக்க வைக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ!
ஜஸ்டின் ட்ரூடோ
  • News18
  • Last Updated: October 22, 2019, 2:44 PM IST
  • Share this:
கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால் பிரதமர் ட்ரூடோ ஆட்சியைத் தக்க வைக்கிறார்.

மொத்தமுள்ள 338 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு ஏற்படும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

இளமைக் காலத்தில் இனவெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக பழைய புகைப்படம் வெளியானது உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கன்சர்வேடிவ் கட்சி ட்ரூடோவுக்கு எதிராக பரப்புரை செய்திருந்தது.


ஆனால் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான  லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக அது ஆட்சி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை பெறுவதற்கு 170 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், லிபரல் கட்சி 156 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கனடா வரலாற்றில் மைனாரிட்டி அரசு, இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே நீடித்துள்ளது.

Also see...
First published: October 22, 2019, 11:29 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading