400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் வியாழனும், சனியும் பேரிணைந்த அதிசயம்... ஏராளமானோர் கண்டுகளிப்பு

400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் வியாழனும், சனியும் பேரிணைந்த அதிசயம்... ஏராளமானோர் கண்டுகளிப்பு

வானில் நிகழ்ந்த அதிசயம்.

தமிழகத்தில் சென்னை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தொலை நோக்கிகள் மூலம் சனி மற்றும் வியாழன் கிரகங்களின் பேரிணைவை கண்டுகளித்தனர்.

  • Share this:
400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் சனி மற்றும் வியாழன் கிரகங்களின் பேரிணைவை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

வியாழனும், சனியும் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. எனினும், இரண்டு கோள்களும் மிகவும் நெருக்கமாக சந்திக்கும் அரிய பேரிணைவு நிகழ்வு 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. கடைசியாக 1623ம் ஆண்டு பேரிணைவு நிகழ்ந்த நிலையில், 397 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாலை இப்பேரிணைவு நிகழ்ந்தது. மாலை 6.30 மணியளவில், பிரகாசமான நட்சத்திரம் போல் இரு கிரகங்களும் இணைந்து ஒளிர்ந்தன.

தமிழகத்தில் இதை சென்னை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தொலை நோக்கிகள் மூலம் கண்டுகளித்தனர்.

  

  

  

  

இனி 2080ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இரு கிரகங்களும் இதேபோல் நெருங்கி வரும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பலரும் இதனை புகைப் படமெடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இரு கிரகங்கள் இணைந்து நட்சத்திரம்போல ஒளிரும் நிகழ்வு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று ஞானியர் சிலர் குழந்தை இயேசுவை பார்த்ததாக பைபிளில் கூறப்படுகிறது. அப்போது தோன்றிய நட்சத்திரம் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: