சவுதியில் துப்பாக்கியுடன் 'தாஷீர்' போர் நடனத்தை நிகழ்த்திய கலைஞர்கள்.... வைரலாகும் விபரீத வீடியோ!

தாஷீர் நடனம்

நூற்றாண்டு பழமையான இந்த பழங்குடி நடனம் வழக்கமாக மேற்கு சவுதி அரேபிய மாகாணமான தைஃப் நகரில் நடந்தது.

  • Share this:
சவூதி ஆண்கள் சிலர் சமீபத்தில் தங்கள் பாரம்பரிய போர் நடனமான தாஷீரை ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சவுதி அரேபியாவில் சில ஆண்கள் தங்கள் நடன திறன்களைக் காட்ட துப்பாக்கியுடன் வந்துள்ளனர். அதில், துப்பாக்கியை கீழ் நோக்கி பிடித்தபடி குதிக்க ஆரம்பிக்கின்றனர். குதிக்கும் போது அவர்களின் கால்கள் அந்தரத்தில் பறக்கும் அந்த சிறு இடைவெளியில் கீழ்நோக்கி சுடுகின்றனர். இதனை பார்ப்பதற்கு ஆபத்தானதாக இருந்தாலும், தங்கள் காலடியில் சுட்டுக் கொண்டதால், உந்துதல் காரணமாக அவர்கள் தரையில் இருந்து மேல் நோக்கி தள்ளப்படுவதைப் போல உணரும் ஒரு மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள்.

இந்த நூற்றாண்டு பழமையான பழங்குடி நடனம் வழக்கமாக மேற்கு சவுதி அரேபிய மாகாணமான தைஃப் நகரில் நடத்தப்படுகிறது. ஏனெனில் பாரம்பரிய தலைக்கவசங்களை அணிந்த ஆண்கள் தோட்டாக்கள் இல்லாமல் கன்பவுடர்களை துப்பாக்கியில் துளைத்து அதனை தரையை நோக்கி சுடுவார்கள். இந்த நடனத்தை தீ நடனம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் இந்த நடனம் சவுதியில் நடக்கும் திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளில் நிகழ்த்தப்படுகிறது. தற்போது இந்த நடனத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.இந்த வீடியோவில் இரு நபர்கள் அங்கிருந்த டிரக்கிலிருந்து துப்பாக்கிகளை வெளியே இழுத்து அவற்றை வெடிமருந்து பொருளால் நிரப்பினர். தரையில் இருந்து தங்களை உயர்த்திக் கொள்ளும் போது துப்பாக்கியை தரையை நோக்கி சுடுகின்றனர். இதனை கண்ட பார்வையாளர்கள் நடன கலைஞர்களை கைதட்டி உற்சாகப்படுத்துவதை வீடியோவில் காணலாம். அந்த வீடியோவில் இருக்கும் ஒரு காபி ஷாப்பை நடத்தும் உரிமையாளர் இது குறித்து கூறியதாவது, "இது எங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளின் காலத்திலிருந்தே உள்ளது. இந்த பாரம்பரியத்தை நாங்கள் இன்னும் தொடர்கிறோம். இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். எனவே அது என்றென்றும் நீடிக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த பாரம்பரிய நடனத்தை சிறுவர்களுக்கு பயிற்றுவிக்க குறைந்த அளவிலான வெடிமருந்தினை துப்பாக்கியில் நிரப்பி  கற்றுத்தரப்படுகிறது. எனவே இந்த பாரம்பரியம் அடுத்த தலைமுறையினருக்கும் சென்றடையும் என அந்த நடன கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பாராட்டுகளையும், கைத்தட்டல்களையும் பெற்று வருகிறது. அதேசமயம் இதில் இருக்கும் ஆபத்து குறித்த விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க...  தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் தேவை என்று ட்வீட் செய்தவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சை

தாஷீர் நடன வடிவம் முதலில் போராளிகளை ஊக்குவிப்பதற்கும் போர்களுக்கு முன் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டது. ஒரு முட்டாள்தனமான தவறு மூலம் தன்னை நாசப்படுத்திக் கொள்வதன் அர்த்தம் தான் இந்த நடனம். "காலில் தன்னைத்தானே சுட்டுக்கொள்" என்ற முட்டாள்தனம், முதல் உலகப் போரின்போது தோற்றத்தை குறிக்கிறது. ஏனெனில் அப்போது போருக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக, வீரர்கள் தங்களைத் தாங்களே காலில் சுட்டுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: