காலநிலை மாற்ற விபரீதம்: இந்த ஜூலை தான் உலகிலேயே மிகவும் வெப்பமான மாதம்!

July 2021: Hottest month in earth

142 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பதிவு செய்யப்பட்டு வரும் வெப்பநிலை அளவுகளை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு ஜூலை தான் மிகவும் வெப்பமான மாதம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
உலகளாவிய ரீதியில் பதிவான வெப்பத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு அதிகளவில் வெப்பம் பதிவு செய்யப்பட்ட மாதம் ஜூலை என்று அமெரிக்க அறிவியல் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. இந்த சமீபத்திய தரவுகள் காலநிலை நெருக்கடி பற்றிய எச்சரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) நிர்வாகி ரிக் ஸ்பின்ராட் கூறியதாவது, "ஜுலை பொதுவாக உலகின் வெப்பமான மாதமாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த வருடம் ஜூலை மாதத்தில் உச்சப்பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையை பாக்கும் போது இந்த வருடம் தான் அதிகம்" என்று கூறியுள்ளார்.

தேசிய சுற்றுச்சூழல் தகவல் மையங்களின் (NCEI) தரவை மேற்கோள் காட்டி ஸ்பின்ராட் ஒரு அறிக்கையில் மேலும் கூறியதாவது, "இந்த புதிய சாதனை உலகளாவிய காலநிலை மாற்றம் ஏற்படுத்திய குழப்பமான மற்றும் சீர்குலைக்கும் பாதையை நமக்கு காண்பிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: காபுல் நகரின் அவலம் – வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்

இந்த வருடம் பதிவு செய்யப்பட்ட நிலம் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையானது, கடந்த 20 ஆம் நூற்றாண்டின் சராசரியான 60.4 டிகிரி பாரன்ஹீட்டை விட 1.67 டிகிரி பாரன்ஹீட் (0.93 டிகிரி செல்சியஸ்) அதிகமாக இருந்தது என்று NOAA தெரிவித்துள்ளது. 142 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பதிவு செய்யப்பட்டு வரும் வெப்பநிலை அளவுகளை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு ஜூலை தான் மிகவும் வெப்பமான மாதம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஜூலை 2016ல் தான் அதிக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இது 2019 மற்றும் 2020 ஜூலை வெப்பநிலைக்கு சமமாக இருந்தது. அதை விட இந்த ஆண்டு ஜூலை மாதம் 0.02 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக பதிவாகியதாக கூறப்படுகிறது. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றம் சேவை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த மாதம் உலகளவில் பதிவான மூன்றாவது வெப்பமான ஜூலை மாதம் இதுதான் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பிரேக் த்ரூ இன்ஸ்டிடியூட்டின் காலநிலை விஞ்ஞானி ஜீக் ஹாஸ்பாதர் என்பவர் கூறுகையில் ஏஜென்சிகளுக்கு தரவுகளில் சிறிய வேறுபாடுகள் இருப்பது அசாதாரணமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் AFP இடம் கூறியதாவது, "NOAA பதிவானது மற்ற உலக வெப்பநிலை பதிவுகளை விட ஆர்க்டிக்கின் மீது வரையறுக்கப்பட்ட கவரேஜைக் கொண்டுள்ளது. எனவே தான் ஜூலை 2021 ஐ இரண்டாவது (நாசா) அல்லது மூன்றாவது (கோப்பர்நிக்கஸ்) வெப்பமான பதிவாகக் காட்டும் வித்தியாசமான தரவுகள் வெளிவந்துள்ளன" என்று ஹாஸ்பாதர் கூறினார்.

Also Read:  ஒற்றை சீட்டுடன் கச்சிதமான வடிவில் அறிமுகமான Honda U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மேலும் பேசிய  அவர் "உலகெங்கிலும் நாம் காணும் தீவிர நிகழ்வுகளான வெப்ப அலைகள் முதல் தீவிர மழைப்பொழிவு , காட்டுத்தீ வரை அனைத்தும் ஒரு சூடான உலகின் நீண்டகாலமாக முன்னறிவிக்கப்பட்ட மற்றும் நன்கு புரிந்து கொள்ளப்பட்ட தாக்கங்கள் ஆகும். இந்த நிலையில் உலகம் CO2 மற்றும் பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்கும் வரை வெப்பநிலை இன்னும் கடுமையானதாக மாறும்" என்று தெரிவித்துள்ளார்.

'சோபரிங்' ஐபிசிசி அறிக்கை :

கடந்த வாரம், பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான ஐநாவின் காலநிலை அறிவியல் அறிக்கையில், 2030 ஆம் ஆண்டில் உலகம் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் என்று கூறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

Also Read:  ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான்! – பயணிகள் கதி என்னவானது?

இதுபற்றிய NOAA இன் ஸ்பின்ராட் கூறியதாவது, "உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் காலநிலை மாறும் வழிகளைப் பற்றிய மிக சமீபத்திய மதிப்பீட்டை வழங்கினர். இது ஒரு தெளிவான ஐபிசிசி அறிக்கையாகும். இது மனித செல்வாக்கு, சந்தேகத்திற்கு இடமின்றி, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இதன் தாக்கங்கள் பரவலாகவும் விரைவாகவும் தீவிரமடைவதை உறுதிப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

உலகில் இதுவரை பதிவான 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலால், இந்த கோடை காலத்தில் கனடாவில் வெப்ப அலைகள், சீனா மற்றும் ஜெர்மனியில் நகர வீதிகளை ஆறுகளாக மாற்றும் மழைக்காலம் ஆகியவை நிகழ்ந்தது. காலநிலை மாற்றத்தால் கொடிய வானிலை பேரழிவுகள் உலகம் முழுவதையும் தாக்கியுள்ளது. கிரேக்கத்திலும் கலிபோர்னியாவிலும்கூட காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி அழிவை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

NOAA, வடக்கு அரைக்கோளத்திற்கான நிலப்பரப்பு வெப்பநிலை மட்டுமே ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக பதிவானது. அதாவது 2012 இல் 2.77 டிகிரி பாரன்ஹீட் (1.54 டிகிரி செல்சியஸ்) சராசரியை விட அதிகமாக இருந்தது. ஆசியாவில் 2010 ஆம் ஆண்டை விட அதிக வெப்பமான மாதமாக இந்த ஆண்டு ஜூலை இருந்தது, ஐரோப்பா அதன் இரண்டாவது வெப்பமான ஜூலை மாதத்தை 2018ல் சந்தித்தது.
Published by:Arun
First published: