ஸ்வீடன் விசாரனைக்குத் தயார்... அமெரிக்க வாரண்ட்டுக்கு எதிர்ப்பு - ஜூலியன் அசாஞ்சே

7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அன்று ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்திலிருந்து லண்டன் போலீஸார் கைது செய்தனர்.

Web Desk | news18
Updated: April 15, 2019, 1:12 PM IST
ஸ்வீடன் விசாரனைக்குத் தயார்... அமெரிக்க வாரண்ட்டுக்கு எதிர்ப்பு - ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே (Image: Reuters)
Web Desk | news18
Updated: April 15, 2019, 1:12 PM IST
ஸ்வீடன் அதிகாரிகளுடன் வழக்கு விசாரணைக்குத் தயார் என்றும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான உத்தரவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடுவேன் என்றும் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கத் துணிந்தது.

அமெரிக்க நடவடிக்கைகளிலிருந்து தப்ப லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அன்று ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்திலிருந்து லண்டன் போலீஸார் கைது செய்தனர்.


இந்நிலையில் அமெரிக்காவுக்கு அசாஞ்சே நாடு கடத்தப்படலாம் என்ற சூழல் உள்ளது.

இதுதொடர்பாக அசாஞ்சேவின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் கூறுகையில், “ஸ்வீடன் நாட்டில் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்று கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விசாரணையில் நாங்கள் தைரியமாகப் பங்கெடுத்து ஸ்வீடன் அதிகாரிகளுக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், அமெரிக்காவின் நாடு கடத்தல் படலத்திற்கு எதிராகக் கடுமையாகப் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: விஜயகாந்த் இன்று சென்னையில் பரப்புரை!

Loading...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...