தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்...!

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்...!
  • News18
  • Last Updated: February 20, 2020, 12:12 PM IST
  • Share this:
அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் உச்ச் நீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியா சர்கியூட் அப்பீல் நீதிமன்றம் ஆகும். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழரான சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பத்பநாபன் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்தார். 1960-களில் இவர்களது குடும்பம், அமெரிக்காவில் குடியேறியது.


எனினும், சீனிவாசன் பிறந்தது இந்தியாவின் சண்டிகார் ஆகும். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் அங்கேயே சட்டப் பட்டமும் பெற்றார்.

ஒபாமா அதிபராக இருந்தபோது, இரு முறை சீனிவாசன் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading