நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதிகள்... துரத்தி பிடித்த நீதிபதி...

அமெரிக்காவில் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கோடே ஹோவர்ட் மற்றும் ஜேக்கப்சன் கைதிகளை நீதிபதி பாசார்ட் துரத்திப் பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Web Desk | news18
Updated: October 27, 2018, 1:09 PM IST
நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதிகள்... துரத்தி பிடித்த நீதிபதி...
கைதிகளை துரத்திக்கொண்டு ஓடும் நீதிபதி
Web Desk | news18
Updated: October 27, 2018, 1:09 PM IST
அமெரிக்காவில் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை நீதிபதி துரத்திப் பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் செஹாலிஸ் நகர நீதிமன்றம் உள்ளது. இங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கோடே ஹோவர்ட் மற்றும் ஜேக்கப்சன் என்ற இரு விசாரணை கைதிகள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கைதிகள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடினர். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதால் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

சுதாரித்துக் கொண்ட நீதிபதி சிறிதும் தாமதிக்காமல் தனது நீதிபதி பாசார்ட் அங்கியை கழற்றிவிட்டு தப்பியோடிய கைதிகளை துரத்திக்கொண்டு ஓடினார். அந்த இரு கைதிகளில் ஒருவரான ஜேக்கப்சன் வேகமாக ஓடிய போது மற்றொரு கைதிஹோவர்ட் கொஞம் மெதுவாக ஓடினார்.

அதனால் அந்த கைதி நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேருவதற்கு முன்னரே நீதிபதி பாசார்ட் மடக்கிப் பிடித்தார்.
அதே சமயம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சற்று தூரத்தில் கைதி ஜேக்கப்சனை காவலர்கள் மடக்கிப் பிடித்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்டில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Loading...
See Also:
First published: October 27, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்