• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பாக். நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - இந்தியாவின் தாக்குதலால் நெருக்கடியில் அரசு

பாக். நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - இந்தியாவின் தாக்குதலால் நெருக்கடியில் அரசு

இந்திய திரைப்படங்களையும், இந்திய கதை சார்ந்த திரைப்படங்களையும் பாகிஸ்தானில் திரையிடப்படாது என்று அந்நாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது. எல்லையில் அமைதி நிலவும் வரை இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது என அந்நாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பிரதமர் இம்ரான்கான் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஸ் காதக், தங்கள் படைகள் தயாராக இருந்ததாகவும், இருள் சூழ்ந்து இருந்ததால் பதிலடி கொடுக்க முடியவில்லை என்றார்.

இனி ஒரு முறை இந்தியா இது போல நடந்து கொண்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்தியா எல்லை மீறிய விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை நட்பு நாடுகள் ஆகியவற்றிடம் முறையிட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.

இது தவிர நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Imran khan | இம்ரான் கான்
இம்ரான் கான்


அதன் அடிப்படையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்தியது குறித்தும், இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதும் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, எல்லையில் அமைதி நிலவும் வரை இந்திய திரைப்படங்களையும், இந்திய கதை சார்ந்த திரைப்படங்களையும் பாகிஸ்தானில் திரையிடப்படாது என்று அந்நாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் தெரிவித்தார்.

மேலும் இந்திய விளம்பரங்களும் பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படாது என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் திரைத்துறையினருக்கு விசா வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் அகில இந்திய திரைத்துறை தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியது.

வான்வெளித் தாக்குதல் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லூ ஹாங், பாகிஸ்தானும் இந்தியாவும் பிராந்தியத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மொரிசே பெய்னே வெளியிட்டுள்ள அறிக்கையில், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை தங்கள் நாடு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் நடவடிக்கைகளை உற்று நோக்கி கவனிப்பதாகக் கூறிய ஐரோப்பிய யூனியன் செய்தித்தொடர்பாளர் மஜா கொசிஜானிக், பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என வலியுறுத்தினார்.

Live Updates: இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க

Also see... இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முடிவு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: