• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஜோ பைடன் - ஜி ஜின்பிங் சந்திப்பு: நெருப்புடன் விளையாட கூடாது - அமெரிக்காவை எச்சரித்த சீனா

ஜோ பைடன் - ஜி ஜின்பிங் சந்திப்பு: நெருப்புடன் விளையாட கூடாது - அமெரிக்காவை எச்சரித்த சீனா

ஜோ பைடன், ஜி ஜின்பிங்

ஜோ பைடன், ஜி ஜின்பிங்

ஜோ பைடன், ஜி ஜின்பிங் சந்திப்பின்போது அமெரிக்காவுக்கு ஜின் பிங் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  • Share this:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காணொளி வாயிலாக சந்தித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் சூழலில் கடந்த திங்கள்கிழமை நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று ஓராண்டை நெருங்கும் நிலையில் இரண்டாவது முறையாக சீன அதிபருடன் காணொளி சந்திப்பு நடந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டாண்டுகளாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து வருகிறார். அதனாலேயே இரண்டாவது முறையாகவும், இந்த சந்திப்பு காணொளியில் நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது வர்த்த்கம், மனித உரிமை, தைவான் பிரச்சினை, கொரோனா பெருந்தொற்று மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் மரியாதைக்குரிய வெளிப்படையான சந்திப்பாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது.

சந்திப்பின் நோக்கம் என்ன?

இருநாடுகளுக்கும் இடையே நிலவும் அசாதரணச்சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்க்கு வித்திட்டவர் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன். சந்திப்பு தொடங்கியதும் காணொளி வாயிலாக இருவரும் கையசைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருநாடுகளுக்கிடையே நிலவும் போட்டி நேரடியாகவும், வெளிப்படத்தன்மையுடனும் இருக்க வேண்டும், மோதல் போக்கை அமெரிக்கா விரும்பவில்லை என்று பைடன் வலியுறுத்தினார். சீன அதிபர் பேசுகையில் தன்னுடய பழைய நண்பர் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவை எச்சரித்த சீனா :

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம் அமைதியையும், ஸ்ரத்தன்மையையும் குலைக்க செய்யும் நடவடிக்கையாகவும் அதனால் அதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ஜி ஜின்பிங் தைவானின் சுதந்திரமான போக்கிற்கு ஆதரவளிக்க கூடாது என்றும் ‘நெருப்புடன் விளையாடா கூடாது’ என்றும் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு முன்னதாகவும் தைவானுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று பைடன் வெளிப்படையாக அறிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் சீனாவின் ஜின்ஜிங்காங், திபெத் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஜோ பைடன் பேசினார். அதற்கு பதிலளித்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் உள்நாட்டு விவகாரங்களில் வெளியிலிருந்து வரும் தலையீடுகளை சீனா விரும்புவதில்லை என விளக்கமளித்தார்.

இதுமட்டுமன்றி வர்த்தகம், கொரோனா பெருந்தொற்று, காலநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன. அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கிடையே நிலவும் போட்டிச்சூழல் காரணமாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மற்ற நாடுகள் உற்று நோக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக உலக பொருளாதரத்தில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதல் இடத்தில் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் சூழலில் சீனாவின் ஆதிக்கம் மேலும் வலுக்குமா? என்ற கேள்வியே எஞ்சி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: