அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர். வர்மாவை அதிபர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரிச்சர்ட் வர்மாவை வெளியுறவுத்துறையின் உயர்மட்ட பதவிக்கு அமெரிக்க அதிபர் பரிந்துரைத்துள்ளார்.
54 வயதான ரிச்சர்ட் வர்மாவை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளராக நியமிக்க ஜோ பைடன் தனது விருப்பத்தை அறிவித்ததாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்க செனட் சபையால் உறுதிசெய்யப்பட்டால், ரிச்சர்ட் வர்மா வெளியுறவுத் துறையின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் இந்திய-அமெரிக்கராக இருப்பார்.
தற்போது தலைமைச் சட்ட அதிகாரியும், மாஸ்டர்கார்டில் உலகளாவிய பொதுக் கொள்கையின் தலைவருமான ரிச்சர்ட் வர்மா, ஜனவரி 16, 2015 முதல் ஜனவரி 20, 2017 வரை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றினார். பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றும் முதல் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார்.
நல்லதை செய்யாமல் கிறிஸ்துமஸை கடந்து செல்ல வேண்டாம் - போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்!
இதற்கு முன், ரிச்சர்ட் வர்மா 1994ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை, அமெரிக்க விமானப் படையில் பணியாற்றினார். அமெரிக்க வெளியுறவுத்துறையில் சட்ட விவகாரங்களுக்கான உதவி அமைச்சராக 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஒபாமா ஆட்சியின் போது, ரிச்சர்ட் வர்மா, சட்டமன்ற விவகாரங்களுக்கான உதவி செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரிச்சர்ட் வர்மா, அமெரிக்க செனட்டர் ஹாரி ரீட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார்,
அமெரிக்க செனட் சபையில் சிறுபான்மை தலைவராகவும் அவர் இருந்துள்ளார். அ திபரின் நுண்ணுறிவு ஆலோசக வாரியத்திற்கு நியமிக்கப்பட்டதுடன், பேரழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.