ட்ரம்பின் திட்டங்களைக் கைவிட முடிவு.. ஒபாமா ஆட்சிகாலத்தை பின்பற்ற ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்

2017ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், ஒபாமா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை அதிரடியாக ரத்து செய்தார்.

ட்ரம்பின் திட்டங்களைக் கைவிட முடிவு.. ஒபாமா ஆட்சிகாலத்தை பின்பற்ற ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்
ஜோ பைடன்
  • Share this:
அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிகால திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும், ட்ரம்ப் கொண்டு வந்த திட்டங்களை கைவிடவும் புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக மருத்துவக் காப்பீடு, சுற்றுச்சூழல் கொள்கை ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால், 2017ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், ஒபாமா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை அதிரடியாக ரத்து செய்தார். அத்துடன் முந்தைய ஆட்சிகாலத்தில் இருந்த பல்வேறு கொள்கைகளிலும் மாற்றம் செய்தார்.

இந்நிலையில், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், ஒபாமா ஆட்சியின் திட்டங்களையே பின்பற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 13 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள ட்ரம்ப் விதித்த தடையை நீக்குவதோடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், அமெரிக்காவிற்குள் வருவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்யவும் பைடன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Also read: வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை.. ஆப்ரிக்க- அமெரிக்கர்கள் இனி உயிர் அச்சம் இல்லாமல் வாழமுடியும் - திருமாவளவன்

மேலும், இந்தியர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய எச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோடு, ஒவ்வொரு நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கான வரம்பை அகற்றவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு சட்டப்படி அமெரிக்க குடியுரிமை வழங்கும் வகையில், குடியேற்ற கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், 5 லட்சம் இந்தியர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் திறன்மிகுந்த வெளிநாட்டினரை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதுடன், மெக்சிகோ எல்லையில் அகதிகளைத் தடுக்க சுவர் கட்டும் திட்டத்தையும் கைவிட பைடன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒபாமா ஆட்சியில் இருந்த வர்த்தகம், வரி குறைப்பு, சிவில் உரிமைகள் மற்றும் ராணுவச் செலவுகள் கொள்கைகளையே தற்போதும் பின்பற்ற ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
First published: November 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading