Home /News /international /

US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை.. ட்ரம்புக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு..

US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை.. ட்ரம்புக்கு தொடக்கத்திலேயே பின்னடைவு..

ட்ரம்ப் - பைடன்

ட்ரம்ப் - பைடன்

கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. இந்திய நேரப்படி, நாளை அதிகாலை வரை ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அமெரிக்க தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மொத்தம் 538 இடங்களில், ஜோ பைடன் 85 இடங்களிலும், ட்ரம்ப் 55 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

    கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே,  தபால் வாயிலாக 10 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், மேலும், ஆறு கோடி பேர், நேரில் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



    இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில், அதிக ஓட்டுகள் பதிவு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2016-இல் நடந்த தேர்தலில், 13.89 கோடி பேர் வாக்களித்தனர். இதில், 4.70 கோடி பேர் மட்டுமே, தபால் ஓட்டுகளை அளித்தனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தபால் ஓட்டுகள் மூலமாக வாக்களிக்க, அனைத்து மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இதுவரை, 9.40 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலைவிட, இரண்டு மடங்கு அதிகம். கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. இந்திய நேரப்படி, நாளை அதிகாலை வரை ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: America election, Donald Trump, Joe biden, US Election 2020

    அடுத்த செய்தி